பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

டாக்டர் க. த. திருநாவுக்கரசு அவர்களும், 'திருமாவளவன்' குறித்துத் தம் முடிவுகளை எடுத்து வைத்துள்ளனர். ஒரே நூலில் இடம் பெற்றுள்ள இவ்வாய்வாளர் களின் கருத்துக்களிடையே முரண்பாடு உள்ளது.

மாறுபட்ட கருத்துக்களின் வன்மைமென்மைகளை ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வரவேண்டிய பொறுப்பினை வருங்காலத் தலைமுறையினரிடம் ஒப்பண்டக்க வேண்டியுள்ளது6 என்று இத்தொகுப்பு நூலை பதிபவித்து வெளியிட்டுள்ள, தமிழ் வளர்ச்சி இயக்ககத்தினர் தம் நிலையைள்ளது எடுத்துக் காட்டியுள்ளனர்.

இனி, தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்' என்ற தொகுப்பு நாலில் 'திருமாவளவன்' குறித்துக் கூறப் பட்டிருப்பனவற்றைக் காண்போம். -

அதில், அடிப்படைச் சான்றுகள்-1 என்ற தலைப்பில் எழுதியுள்ள கட்டுரையில். பேராசிரியர் டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள், பக்கம் 15ல், பொருநராற்றுப் படையில் கரிகாற் பெருவளத்தானைப் பற்றிய வரலாற்றுச் செய்திகள் காணப் பெறுகின்றன என்றும், இவன் தந்தையின் பெயர் உருவப் பஃறேர் இளஞ்சேட் சென்னி என்றும் குறிப்பிட்டுள்ளார். பக்கம் 17ல், கரிகாற் பெருவளத்தான்' (பட்டினப்பாலை: கொளுவில் இடம் பெற்றிருப்பது) 'கரிகாலன்’ (பட்டினப் பாலை ஈற்றில் இடம் பெற்றிருக் கும் வெண்பாவில் இடம் பெற்றிருப்பது) ஆகிய பெயர்கள்,! சோழன் கரிகாலனையே குறிப்பவை: இளமையில், இவனைச் சிறையிட்டனர். ஆனால், இவ்ன் வாளை உருவிக் கொண்டே பகைவரிடமிருந்து வீரத்தோடு தப்பினான், இதனால், இவன் பெற்ற ஆட்சி உரிமை, 'உருகெழுதாயம்' (பட்டினப்பாலை-227) எனப் புகழ்பெற்றது' எனக் கூறியுள்ளார்.