பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

தமிழக வரலாறு-கரிகாற் பெருவளத்தான்

னுடைய தந்தை உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னி கி.பி. 56 முதல் கி. பி. 80 வரை ஆட்சி செய்தவன் ஆவான். அவனுடைய (உருவப்பஃறேர் இளஞ்சேட் சென்னியின்) தந்தையான கரிகாலன்- கி. பி. 30 முதல் கி. பி. 55 வரை ஆண்டவன் ஆகலாம்’ என்றும்,

பக்கம் 489ல் 'கரிகால் பெரு வளத்தான்’ எனவும், 'திருமாவளவன்' எனவும் போற்றப்படும் சோழப் பெரு வேந்தனே, இரண்டாம் கரிகாலன் ஆவான். தாய் வயிற்றில் இருந்து தாயம் எய்திய அவன் கடும்போர் புரிந்து தன் உரிமையை நிலை நாட்டினான். (பட்டினப் பாலை 207). பின்னர் கரிகாலன்-11, இமயம் வரை படையெடுத்துச் சென்றான். இமயத்தில் தன் புலிச் சின்னத்தைப் பொறித்துத் திரும்பினான் (சிலம்பு 5 :90;104) என்றும் கூறியுள்ளார்.11

ஒரே நூலில், திருவாளர், டாக்டர் சி. ஈ. இராமச்சந்திரன் அவர்களும், மயிலை சீனி. வேங்கடசாமி அவர்களும், 'கரிகாலன், கரிகாற் பெருவளத்தான், திருமா வளவன்' என்ற பெயர்கள் ஒருவனையே குறிக்கும். சங்க காலத்தில், கரிகாலன் எனும் பெயருடையான் ஒருவன் தான் இருந்தான் எனக்கூற, திருவாளர் டாக்டர். க. த. திருநாவுக்கரசு அவர்கள். 'உருவப்பஃறேர் இளஞ் சேட் சென்னியின் தந்தை முதலாம் கரிகாலன், மகன் இரண்டாம் கரிகாலன்” எனக் கூறியிருப்பது முரண்பட்டு நிற்கிறது. இம்முரண்பாடு களையப்படல் வேண்டும்.

இதற்கான விரிவான விளக்கம், "பொருநராற்றுப் படையின் பாட்டுடைத் தலைவன் கரிகாலனும், பட்டினப் பாலையின் பாட்டுடைத் தலைவன் திருமாவளவனும், வேறு வேறுபட்ட இருவரா? அல்லது இருவரும் ஒருவரா என்ற தலைப்புள்ள என்னுடைய கட்டுரையில், திருவாளர், டாக்டர். சி. ஈ. இராமச்சந்திரன் அவர்களின் திருமா