பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா.கோவிந்தனார்

75

"விழுமியம்; பெரியம். யாமே: நம்மில்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிதுஎன
எள்ளி வந்த வம்ப மன்னர்"28

என்ற இடைக்குன்றுார்க்கிழாரின் பாக்களில்தான், வென் றோன் செழியன் என்பதும், தோற்றோர் எழுவர் என்பதும் கூறப்பட்டிருப்பதோடு, வேறு எப்புலவர் பாட்டிலும் வெளிப்படாத அவன் இளையோன் என்பது கூறப்பட் டுளது. அதுமட்டும் அன்று,

“இளையன் இவன் என உளையக் கூறி
படையமை மறவரும் உடையம் யாம் என்று
உறுதுப்பு அஞ்சாது உடல் சினம் செருக்கிச்
சிறு சொல் சொல்லிய சினங் கெழு வேந்தர்"

என்ற பாட்டுடிைத் தலைவன் குரலை29

"விழுமியம்: பெரியம் யாமே. நம்மில்
பொருநனும் இளையன்; கொண்டியும் பெரிது
என எள்ளி வந்த வம்ப மன்னர்"30

என அப்படியே எதிர் ஒலிக்கவும் செய்துள்ளது.

ஒருவன்பால் அமைந்துவிடும் கல்வி, செல்வம், வீரம், விழுப்புகழ்களின் அளக்கலாகா மிகுதி, கண்ட வழி, வியப் புற்று நிற்கும் நிலையில், 'இத்துணை உ நிற்பான் யாவனோ?” என வினா எழுப்புவது இது அது பாட்டின் மரபும் கூட. அது, வியப்பு அடிப்பு : .யாக எழும் வினாவே அல்லது, அறியாமையின் அடிப்படையில் எழும் வினா அன்று.

வல்வில் ஓரியின் வில்லாற்றல், கொடை வளங்களை அறிந்து, வன்பரணர், புறப்பாட்டு ஒன்றில்31 கொலை