பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. தொல்காப்பியர் காலம் எது?

தொல்காப்பியர் காலம் எது என்பதை ஆராய முற்பட்ட ஆய்வாளர்களிடையே ஒத்த கருத்து இல்லை.

தமிழ் நாட்டு வரலாற்றுக்குழு தொகுத்து, தமிழ் வளர்ச்சி இயக்ககத்திற்காக, தமிழ் நாட்டுப் பாடநூல் நிறுவனம் 1983ல் வெளியிட்ட,"தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்" என்ற நூலில் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள வரலாற்று ஆய்வாளர் களிடையே கூட தொல்காப்பியர் காலம் எது என்பதை திட்டவட்டமாக வரையறை செய்வதில் ஒத்த கருத்து இல்லை.

"தமிழ் காட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்" என்ற அந்நூலில், 'அடிப்படைச் சான்றுகள்' என்ற தலைப்பில் கட்டுரை எழுதியுள்ள, சென்னைப் பல்கலைக் கழக வரலாற்றுத்துறை முன்னாள் தலைவர், டாக்டர். சி. ஈ. இராமச்சந்திரன் அவர்கள் "தொல்காப்பியத்தின் காலம் யாது? என்ற தலைப்பின் கீழ்-'தொல்காப்பியம் கடைச் சங்க காலத்திற்கும் முற்பட்டது எனக் கூறலாம்.இதனைத் தொல்காப்பியத்தில் வரும் சொல்லாட்சிகளுக்கும், கடைச் சங்க நூல்களில் வரும் சொல்லாட்சிகளுக்கு மிடையே காணப்பெறும் ஒற்றுமைகளையும், வேற்றுமை களையும் ஒப்பிட்டு அறியலாம்” என்றும், இஃது. இடைச் சங்க காலத்தைச் சேர்ந்த நூலாகுமென முடிவு செய்கிறோம் என்றும், 'தொல்காப்பியத்தின் காலம்