பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர். கா. கோவிந்தனார்

85

தோராயமாகக் கி. மு. நான்காம் நூற்றாண்டெனக் கூறி அமையலாம்3 எனவும், "தொல்காப்பியர் தமது நூலை நிலந்தருதிருவின் பாண்டியன் அவையில் அரங்கே ற் றினார். அப்பொழுது அவையின் தலைவராயிருந்தவர் அதங்கோட்டாசான் எனும் பேரறிஞர் ஆவர்"4 எனவும், இவ்வாறு,தொல்காப்பியம் கி.மு. நான்காம் நூற் றாண்டளவில் தோன்றியதையும், அது தோன்றுவதற்கு முன்னமே பலஅரிய நூல்கள் தமிழகத்தில் இருந்ததையும், சங்கத் தமிழரின் வாழ்க்கைப்பட்டாங்கையும் தொல்காப்பி யத்தாலாயே அறிகிறோம்"5 என்றும் தம் ஆய்வு முடிவை எடுத்து வைத்துள்ளார்.

தமிழ் நாட்டு வரலாறு:-சங்க காலம்-அரசியல்' என்ற அதிே நூலில், காலக் கணிப்பு' என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை எழுதியுள்ள பேராசிரியர். பொன். சுப்பிர மணியம் அவர்கள், தொல்காப்பியத்தின் காலம்பற்றி குறிப் பிடும்போது, ஓரிடத்தில் 'தொல்காப்பியம் என்னும் இலக் கண நூல் கி. மு. 5 ஆம் நூற்றாண்டில் தோன்றியது என்று கூறிச் சங்க காலத்தின் முன்எல்லை கி. மு. 5 ஆம் நூற் றாண்டிலிருந்து தொடங்குவதாகக் காட்டுவர் என்றும், பிறிதோரிடத்தில், 'தொல்காப்பியத்தின் காலத்தைக் கி. மு. 3ஆம் நூற்றாண்டு என்று கூறுவாருமுண்டு என வும் கூறியுள்ளார். ஒருவரே, ஐந்தாம் நூற்றாண்டு என்றும், மூன்றாம் நூற்றாண்டு என்றும் கூறுவது ஆய்வு நெறியாகுமா? மேலும், காட்டுவர் என்றும், கூறுவாறு முண்டு' என்றுதான் குறிப்பிட்டுச் சென்றுள்ளாரே அல்லது அவர்.முடிவு கூறப்படவில்லை.

“தமிழ் நாட்டு வரலாறு-சங்க காலம்-அரசியல்" என்ற அந்த நூலில், சோழர் வரலாறு எழுதியுள்ள, ஆய்வாளர், மயிலை. சீனி. வேங்கடசாமி அவர்கள், தமிழ் இலக்கியத்துள் காலத்தால் முந்தியது தொல்காப்பியம்,


த-6