பக்கம்:தமிழக வரலாறு-கரிகாற்பெருவளத்தான்.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

புலவர் கா. கோவிந்தனார்

87

லாம் நூற்றாண்டிற்கு முன்னர், அகஸ்தியர் வாழ்ந்திருக்க இயலாது. தொல்காப்பியம் பற்றிய ஆய்வு, அதன் ஆசிரியரும், அவர்தம் ஆசிரியரும், அதற்கு ஒரு நூறு ஆண்டு அல்லது அதற்கு மேலும் கழித்தே வாழ்ந்திருக்க வேண்டும் எனக்கொள்ளவே நம்மை வற்புறுத்துகிறது12 எனக் கூறுவதன் முலம், தொல்காப்பியரை, கி.மு. முதல் நூற்றாண் டின் கடைவாயிற்கண் நிறுத்தவும் மறுத்துள்ளார்.

அதற்கு அவர் கூறும் காரணம் பின்வருமாறு:

திருமணம் போலும் மங்கள நிகழ்ச்சிகளுக்கு உரிய நாளின் ஒரு கூறு எனும் பொருளில், 'ஒரை' எனும் சொல்லைத் தொல்காப்பியர் ஆண்டுள்ளார். மறைந்த ஒழுக் கத்து ஒரையும் நாளும் துறந்த ஒழுக்கம் கிழவோற்கு இல்லை13 'ஒரை' எனும் இத்தமிழ்ச் சொல், ஹவர்' (Hour) எனும் ஆங்கிலச் சொல்லைப் போலவே, முடிந்த முடிவாக, "ஹொர (Hora) என்ற கிரேக்கச் சொல்லி லிருந்தே பெறப்பட்டதாகும். "ஹொர' என்ற அச்சொல், கிரேக்க மொழியில், கி.மு. ஐந்தாம் நூற்றாண்டுவரை, 'ஆண்டின் ஒரு பருவம்' என்னும் பொதுப் பொருளே’ (Season in general) உடையதாகும். ஒரு நாளின், ஒவ்வெர்ரு கூறும், ஏழு கோள்களில் ஒவ்வொரு கோளின் ஆட்சிக் கீழ் வருவதாகக் கொள்ளப்பட்ட கி.மு. இரண்டாம் நூற்றாண்டில் தான், ஹொர என்ற அச்சொல்லுக்கு, ஒரு நாளின் இருபத்தினான்கு கூறுகளில் ஒரு கூறு உணர்த்தும் பொருள் தரப்பட்டுளது. ஹொர என்ற அச்சொல், தான் உணர்த்தும் அச்சோதிடிப் பொருள் குறிப்போடு, கி.மு. முதல் இரண்டு நூற்றாண்டுகளில், கிரேக்க மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த காந்தார நாட்டிற்குப் பயணம் செய்தது. சமஸ்கிருத நூலாசிரியர்கள். கிரேக்கர்களின் சோதிடக் கலையைக் கற்றுக் கொண்டபோது, அச் சொல் சமஸ் கிருதத்திலும் இடம் கொண்டது.பின்னர்,அது தெற்கில் பயணம் செய்து, தமிழில் நுழைந்து விட்டது. ஆகவே,