உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94



7. பாண்டியன் பன்னாடு தந்த மாறன் வழுதி

இவன் பாடிய பாடல்கள் மூன்று.80 (நற் :97, 301; குறுந்270) 'பன்னாடு தந்த' என்ற சிறப்பு இவனுக்கு வந்த காரணம் தெரியவில்லை. கடல் கோளால், பாண்டிநாட்டின் பெரும் பகுதி ஆழ்ந்து போக இழந்த நாட்டிற்கு ஈடாக வடக்கே பல நாடுகளைக் கொண்ட பாண்டியன் வரலாறு, கலித்தொகையிலும் 81 சிலப்பதி காரத்திலும் 82 கூறப்பட்டுளது. இவன் அவனாதல் கூடுமோ என்பது ஆராயத்தக்கது. கணவன், பொருள் தேடல்போலும் வினை மேற் காண்டு வேற்றுார் சென்றுவிடத் தனித்திருக்கும் தலைவிக்கு, மாலையில் மலர் விற்கும், மகளிரும் வெறுக்கத் தக்கவராவர்83 என்பதுபோலும் கருத்தமையப் பாடியிருக்கும் இவர் பாடல்கள் நல்ல நயம் உடையன.