112
ஆனால் திருக்கோவிலுார் கல்வெட்டு ஒன்று, கபிலர் வடக்கிருந்து உயிர்விடுவதற்கு முன்னர்ப் பாரி மகளிரை, மலையமான் மக்கள் இருவர்க்கு மணம் முடித்து வைத்தார் என்கிறது.88
தனிப்பாடல் திரட்டு, பார்ப்பார் பால் ஒப்படைக்கப்பட்ட பாரி மகளிரை ஒளவையார் மூவேந்தர் ஒப்புதல் பெற்று அவர் முன்னிலையில், தெய்வீவகனுக்கு மணம் செய்து வைத்தார் எனக் கூறுகிறது.
பாரி மகளிர் திருமணம் குறித்த இச்செய்திகளில், உண்மை இருக்கிறதோ இல்லையோ, பாரி மகளிரை மனம் செய்து கொடுப்பதில் ஆர்வம் காட்டியிருந்தது தமிழ் கெஞ்சங்கள் என்பதை அவை உறுதி செய்துள்ளன.
7. பேகன்
இவனைப் பாடிய புலவர்கள், அரிசில்கிழார்89 இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார்90 கபிலர்,91 பரணர்92, பெருங்குன்றுார் கிழார்,93 மாமூலனார்94பெருஞ்சித்திரனார்95 ஆக எழுவர்.
இப்பாக்கள் மூலம் இவன் வரலாறாக அறியத்தக்கன இவை : மதுரை மாவட்டத்தில் பொதினி என்ற பெயருடைய மலையிடை ஊர் இருந்தது. அது ஆவிநன்குடி என்ற பெயரால் வழங்கி வந்தது.96 இப்போதைய பழனிதான் அந்த ஊர். அந்த ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆவியர் என்ற குறுகில மன்னர் ஆண்டு வந்தனர். இவ்வாவியர் சேரகுல அரசர்களுக்கு மகள் கொடுக்கும் உறவுடையவர்.97