உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

131


7. அம்பர் கிழான் அருவந்தை

சோணாட்டில், காவிரியின் கிளை ஆறுகளுள் ஒன்றாகிய அரிசிலாற்றின் கரைக் கண் அமைந்த அம்பர் என்ற ஊரில் வாழ்ந்தவன். அருட்கொடையாளன். புலவர் கல்லாடனாரால் பாடப்பெற்றவன்20

8. அருமன்

சிறுகுடி என்ற ஊரில் வாழ்ந்தவன். இரவலர்க்கு இடையறாது உணவு படைத்து புகழ் பெற்ற வள்ளல்: கள்ளில் ஆத்திரையனார்,21 நக்கீரர்,22 ஆகிய புலவர்களால் பாராட்டப் பெற்றவன்.

9. அவியன்

அவியலூர் என்ற ஊரில் வாழ்ந்தவன்: நல்ல மனை வாழ்க்கை வாய்க்கப் பெற்றவன். சிறந்த வள்ளல். இவன் புகழ்பாடிய புலவர்கள், காவிரிப்பூம்பட்டினத்துச் செங்கண்ணனாரும்,23 மாறோக்கத்து நப்பசலையாரும்24 ஆவர்.

10. அழிசி

அழிசி, காவிரிக் கரையில் இருந்த ஆர்க்காட்டில் வாழ்ந்தவன்25 சோழர் பெயரோடு இணைத்து வழங்கப் பெற்றவன்26 வாள் வீரர் நிறைந்த பெரும் படை உடையவன். பகைப் படை வென்று கைப்பற்றும், யானைகளைக்கொண்டு வந்து தன் ஊர் மருத மரங்களில் பிணிக்கும் பேராற்றல் வாய்ந்த சேந்தன் என்ற மகனைப் பெற்றவன்27 பரணர்28, நக்கண்ணையார்29 ஆகிய புலவர்களோடு, பாடியவர் இன்னார் என்று அறியமாட்டாப் புலவர்30 ஒருவராலும், பாராட்டப் பெற்றவன்.