பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

143

37. ஏறைக்கோன்

குறவர் தலைவன். பெருங்கல் நாடன். சிறந்த வில்லாளி. வேற்படைத் தாங்கியவன். போற்றற்குரிய பண்புகள் பெற்றவன். நட்பு கொண்டு பழகியவர் செய்யும் தவறுகளை மன்னிக்கும் தன்மை; பிறர் வறுமை கண்டு வருந்தும் உள்ளம்; பழி தரும் வழியில் வெற்றி பெற விழையா மாண்பு; அரசர்க்கும் அஞ்சா பெருமித வாழ்வு; போன்ற நல்லியல்புகள் கொண்டவன். பாடிய புலவர் குறமகள் இள எயினியார்,78

38. ஒல்லையூர் கிழார் மகன் பெருஞ்சாத்தன்

பாண்டிய நாட்டின் வடவெல்லையான வெள்ளாற்றின் தென் கரையில் அமைந்த தென் கோனாட்டின் மேலைப் பகுதி ஒல்லையூர் காடு என அழைக்கப்பட்டது, அந்நாடாண்ட பெருஞ்சாத்தன் பெரு வீரன். வல்வேற் சாத்தன் எனவும் அழைக்கப்பட்டவன். தன்னைப் பாடி வரும் பாணர்க்கு பரிசில் பல நல்கும் பேருள்ளம் பெற்றவன். பெருஞ்சாத்தன் மறைந்த காலை, அவன் பிறிவாற்றத வீரரும், மகளிரும், பாணரும், பாடினியரும் மகிழ்ச்சி இழந்தனர். மலர் சூடி வாழும் மனம் நிறை வாழ்வை வெறுத்தனர்.79

39. ஓய்மான் வில்லியாதன்

ஓவியர் குடியில் வந்தவன். ஓய்மானாடுஆண்டவன். எயிற்பட்டினம், கிடங்கில், உப்பு வேலூர், ஆமூர் போன்ற நகரங்களைக் கொண்ட ஒய்மானாட்டுத் தலை-