160
பேராண்மையுடைய பிண்டன் எனும் சிற்றரசனை வென்றான்143 அரசர் பலரை வென்று, அவர் தம் மனைவியர் தலையை மழித்து, அக்கூந்தலால் கயிறு திரித்து அவ்வரசர் தம் யானைகளைப் பிணித்துக் கொணர்ந்தான்144
நன்னனின் காவல் மரமாக விளங்கியது வாகை மரமாகும். அம் மரத்தின் பெயரால் வாகை எனும் ஊர் ஒன்று கண்டு; அவ்வூர் ஆட்சியைத் தன்பால் அன்பு உடையவனாகிய ஆய் எயினன் என்பான் பால் ஒப்படைத்திருந்தான். ஒரு கால், அண்டை நாடான புன்னாடு என்ற பகை நாட்டை யழிக்க நன்னன் படை கொண்டு சென்ற போது, அவனுடைய பாழியையும், பாழிக்கண் உள்ள பெரும் பொருளையும் காக்கும் பொறுப்பை ஆய் எயினன் ஏற்றான்.
அந்நிலையில், மிஞிலி என்பான் பாழியைத் தாக்கினான். நன்னனின் பாழியைக் காக்க ஆய் எயினன் விரைந்து வந்தான். போரில் ஆய் எயினன் கொல்லப்பட்டான். நண்பனுககுத் துணையாக நன்னன் போர்க்களம் புகாது புலவர் பழிக்கு ஆளானான். பாழி, பாரம் இரு நகரங்களையும் நன்னன் இழந்தான்145
நன்னன் அரண்மனைத் தோட்டம் நறுமாமரங்கள் நிறைந்தது. அருகே ஓடிய அருவியில் மிதந்து வந்த, அத் தோட்டத்து மாங்காய் ஒன்றை. அவ்வருவியில் நீராட வந்த இளம் பெண் ஒருத்தி, அது நன்னன் அரண்மனைத் தோட்டத்துக்காய் என அறியாது, தின்று விட்டாள். அக்குற்றத்திற்காக, நன்னன் அப் பெண்னைக் கொல்லத் துணிந்தான். அப் பெண்ணின் பெற்றோர் அப்பெண்ணின் உயிருக்கு ஈடாக அவள் நிறை பொன்னாலாய பாவையும்,எண்பத்தொரு யானை-