196
திறனை அரங்கேற்ற பூந்தொடை விழா என்றபெயரில் ஆண்டுதோறும் விழா எடுத்தனர்.32
மழவர் தம் திறன் அறிந்து, அவர்களைத் தம் படையில் சேர்த்து படை வலிமை பெற்றனர் சேர மன்னர் பலர். 'மழவர் மெய்ம்மறை,33 என்ற சிறப்புப் பெயரும் ஏற்றனர்.
சேரர் துணைவனாக விளங்கிய தகடூர் அதியமான் நெடுமான் அஞ்சியும் மழவர் படையை தன் பணியில் கொண்டிருந்தான். ம ழவ ர் பெ ரு ம க ன் என்ற பெருமையைப் பெற்றவனாக விளங்கினான்34 கொல்லி மலைத் தலைவனான வல்வில் ஓரியும் மழவர் துணை கொண்டுமழவர் பெருமகன் மாவள் ஓரி'35 எனப் புகழப்பட்டான்.
ஆனிரைக் கவருபவராகவும், ஆறலைக் கள்வராகவும் தம் புரவிப் படைகொண்டு, அண்டை நாடுகளுக்குத் தொல்லை கொடுத்து வந்த மழவர்களை, பொதினி மலைத்தலைவனான நெடு வேளாவி என்பான் வென்று துரத்தினான்,36 வேங்கடத்து மன்னனான புல்லி என்பான் படை கொண்டு சென்று மழவர் நாட்டையே வென்று, ம ழ வ ர் க ளை அடக்கி ஆண்டான்.37
9. வடுகர்
தமிழகத்தின் வட வெல்லைக் கப்பால், புல்லி ஆண்ட வேங்கட மலைக்கு அப்பால் அமைந்திருந்தது வடுகர் தேயம்.38 வடுகர் வேற்றுமொழிமரபினர். வடுகர் நாட்டில், தமிழகத்து எல்லையையொட்டி அமைந்திருந்தது, கட்டி என்பவனால் ஆளப்பட்ட நன்னாடு.39