உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

195

தாயர்களாகவும் பூழியர் விளங்கினர். அத்தொழிலோடு அமையாது, தம் நிரைகளைப் புல்நிறை நிலந்தேடி மேயகொண்டு செல்லும் போது காடுகளில் கற்களின் இடையே சிதறிக் கிடக்கும் ஒளி வீசும் மாணிக்கக் கற்களையும் திரட்டி வாழ்ந்தனர்.23 காட்டு யானைகளைப் பிடிக்கும் தொழிலையும், அவற்றைப் பழக்கும் முறையினையும் அறிந்தவர் பூழியராவர்24

பூழி நாடு சேர நாட்டின் உள் நாடுகளில் ஒன்றாய் விளங்கியது. சேர மன்னர் பலர், ‘பூழியர்கோ,25 ‘பூழியர் பெருமகன்,26 ‘பூழியர் மெய்ம்மறை,27 என சிறப்புப் பெயர்களைப் பெற்றிருந்தனர். இடையே பூழி நாடு நன்னன் கைப்பட்டு ஆளப்பட்டது. சேரமான் களங்காய்க் கண்ணி நார்முடிச்சேரல்; நன்னனை வென்று, அவன் காவல் மரமான வாகை மரத்தினை வெட்டி வீழ்த்தி, பூழி நாட்டை மீட்டான்.28

5. மழவர்

சோணாட்டைச் சேர்ந்த மழ நாடு பகுதியில் வாழ்ந்த மரபினர் மழவர் ஆவர். மழநாடு மழகங்கம் எனவும் அழைக்கப்பட்டது. விரைந்து செல்லும் புரவிப் படை வீரர்களாக விளங்கியவர் மழவர்.29 சிவந்த கண்களையும், சுருண்டு தொங்கும் தலை முடியையும் கொண்ட மழவர், தம் புரவிப் படை கொண்டு நெடுந்தூரம் சென்று ஆனிரைகளைக் கவர்ந்து வரும் களவு வாழ்க்கையினைக் கொண்டவர்களாக வாழ்ந்தனர்30 ஆறலைத்து வாழும் கொடுமையாளராக விளங்கினர்31

தம் குலத்து இளைய வீரர்கட்கு விற்போர், வாட்போர், போன்றவற்றில் பயிற்சி அளித்து, அவர்கள்