194
3. தொண்டையர்
காஞ்சி மாநகரைத் தலை நகராய்க் கொண்டு, அருவா, அருவா வடதலை நாடு, வேங்கட மலை உள்ளடக்கிய நாடான தொண்டை நாடு ஆண்ட மரபினர் தொண்டையர் என அழைக்கப் பெற்றனர்20 வேங்கட மலையில் வேட்டையாடிப் பெற்ற வேழங்களைக் கொண்ட, படையுடையவர், தேர்ப் படையும் கொண்டவர்.21 பகைவர் தம் அரண்களை அழித்து அவர் தம் முடிகளையும் நாடுகளையும் கைப்பற்றி விழுமிய வாழ்வு வாழ்ந்தவர்.22 தொண்டையர் மரபு, வட தமிழ் நிலப் பகுதியில் தோன்றியது, சோழ மன்னன் கரிகாற் பெருவளத்தான் காலத்திற்குப் பின்னரே இருந்திருக்க வேண்டும். தொண்டையர் மரபினரைப் பற்றியும், அம்மரபின் மன்னர்களான தொண்டைமான், திரையன் ஆகியோரைப் பற்றியும் தம்பாடல்களில் குறித்துள்ள புலவர்களான, தாயங்கண்ணனார், கல்லாடர், ஒளவையார், காட்டூர்கிழார் மகனார் கண்ணனார், நக்கீரர் ஆகியோரெல்லாம் கரிகாற் பெருவளத்தான் காலத்திற்கு பிற்பட்டோராவர் என்பது இதை உறுதி செய்யும்.
4. பூழியர்
பூழி நாடு, செந்தமிழ் நிலஞ்சேர் பன்னிரு நிலத்துள் ஒன்றாக விளங்கியது. அந்நிலத்திற்கு உரிய மரபினரே பூழியர் என்றழைக்கப்பட்டனர். ஆனிரை ஓம்பி வாழ்ந்தவர். பசுக்களையும் காளைகளையும் மேய்க்கும் தொழிலை மேற்கொண்ட நல்லினத் தாயர்களாகவும், ஆடுகளை மேய்த்து வாழும் புல்லினத்