பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22



கோக் கோதைமார்பன்

தொண்டியைத் தலைநகராகக் கொண்டு நாடாண்டவன் கூடலைக் கைப்பற்ற வந்த கிள்ளி வளவன், பாண்டியன் படைத்தலைவனாம் பழையன் பால் தோற்றது கேட்டு மகிழ்ந்தவன்52 “அவன் ஆண்டநாடு, கடற்கரை நாடே ஆயினும். மலைவளமும். மருத வளமும் பெற்றிருந்தமையால், புலவர்கள் அவனைக் குறிஞ்சி நிலத்து நாடன் என அழைப்பதா? மருத நிலத்து ஊரன் என அழைப்பதா? என அறியாது மயங்குவர்” எனப் புகழ்ந்துள்ளார் புலவர் பொய்கையார் 53.


சோழிய ஏனாதி திருக்குட்டுவன்

இவனைப் பாடிய புலவா, கோனாட்டு எறிச்சிலுரர் மாடலன் மதுரைக்குமரனார் 54 வெண்குடை ஊரில், இருந்து அரசாண்டவன்; சிறந்த கொடையாளி. குலப் பகைவராம், சோழர் படையில் பணியாற்றிப்படைத் தலைவர்களுக்கு அளிக்கும் “ஏனாதி” என்ற பட்டத்தைப் பெறுமளவு பெரிய வீரனாக விளங்கியவன்


மாந்தரம் பொறையன் கடுங்கோ

இவன் “மாந்திரன்”55 என்றும் “மாந்தரம் பொறையன் கடுங்கோ”56என்றும்அழைக்கப்பெறுவன். இவனைப் பாடிய புலவர்கள் பரணரும். பெருங்குன்றுார்க் கிழாரும் ஆவர் நாளும் கோளும் மாறாதிருக்க நல்ல மழை பெய்யுமளவு நல்லாட்சி நடத்தியவன்; போர் பல வென்று போர்க்களிறுகள்