54
கோவூர் கிழார்; பாண்டியனோடு நட்பு கொண்டிருந்த குமாரப் பள்ளியான். கருவூர் ஆண்டிருந்த சேரனோடு மட்டும் ஏனோ பகை கொண்டு படை எடுத்துச் சென்று, அக்கருவூரை அழித்த காட்சியைப் பாராட்டுவார்போல், போரினால் மக்கள் படும் அவலத்தை அவன் மனங்கொளச் செய்துள்ளார்.52
இவன் வரலாறாக அறியத்தக்கன இவ்வளவே,
குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்
இவனை, ஆடுதுறை மாசாத்தனார் (புறம் : 227) ஆலத்துார்கிழார் (34, 35, 69) ஆவூர் மூலங்கிழார் (38,40) இடைக்காடனார் (42) எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார் (397), ஐயூர் முடவனார் (228) கோவூர் கிழார் (41, 46, 70, 386) நல்லிறையனார். (393) மாறோக்கத்து நப்பசலையார் (37, 39, 226) வெள்ளைக் குடி நாகனார் (35) ஆகிய புலவர்கள் பாடியுள்ளார்கள்.
இப்பாடல்களில், இவன் பெயர், "வளவன்" என அடையெதுவும் பெறாமலும், "கிள்ளிவளவன்" "வாய்வாள்வளவன்" "பொலம்பூண்வளவன்" என அடைபெற்றும் அழைக்கப் பெற்றுளது, கொளு அனைத்திலும் அவன் பெயர், "குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவன்" என வழங்கப் பெற்றுளது. இது ஒன்றே, அவன் "குராப்பள்ளித் துஞ்சிய கிள்ளிவளவனின்"வேறுபட்டவன் என்பதை உணர்த்துகிறது.