62
மட்கலங்கள் செய்யும் குயவன், விரும்பிய வாறெல்லாம், அவன் திகிரியின் கீழ்வைக்கப்படும் மண் மாறிவிடுதல் போல், தமிழ்நாடு அவன் ஆட்டியபடியெல்லாம் ஆடி வந்தது. அதனால், அவனைப் பாடிய புலவர்கள், விரும்பினால், பாண்டியர் தம் மதுரை மாநகரையும், சேரர்க்குரிய வஞ்சி மாநகரையும் பரிசிலாகத் தரத்தக்க வல்லாளன்.77
அவன் காலத்தில், தமிழகத்தில் வேறு பல அரசுகள் இருந்தன என்றாலும், அவர்களின் வெற்றி முரசுகள் எல்லாம், அடித்து முழக்கம் எழுப்பினால், அது கேட்டு நலங்கிள்ளி போர் மேற்கொண்டு வந்து அழித்துவிடுவனே என்ற அச்சத்தால், வாயடிங்கியே கிடந்தன.78
அவன் நாற்படை, இவ்வாறு ஆற்றலால் பெரிது. எத்தனை போர்களுக்குச் செல்ல வேண்டி நேரினும், அத்தனை போர்களுக்கும் அனுப்பவல்ல பெரும்படை அவன் நாற்படை, பனந்தோப்பினிடையே அணிவகுத்துச் சென்றால், அவன் துாசிப் படைக்குப் பனைநுங்கு கிடைக்கும், இடைப்படைனக்குப் பனம் பழந்தான் கிடைக்கும், கடைசிப்படைக்குப் பனங்கிழங்குதான் கிடைக்கும். அவ்வாறு ஓர் இடத்தைக் கடக்க, அத்துணை காலத்தை எடுத்துக்கொள்ளுமளவு பெரிது அவன் படை.79
நலங்கிள்ளி புகாரில் இருந்து அரசாண்டிருந்த போது, உறையூரை ஆண்டிருந்தவன் இறந்து போனான். அரசிழந்திருந்த உறையூரைத் தனதாக்கிக் கொள்ள விரும்பினான், ஆவூர்க்கோட்டைக்குரியோனாகிய நெடுங்கிள்ளி. அது அறிந்த நலங்கிள்ளி அக்நெடுங்கிள்ளியை அவன் ஆவூர்க்கோட்டைக்கே