உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழக வரலாறு-சங்ககாலம்-அரசர்கள்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

65

 கொல்லக் காலம் பார்த்திருந்தான். அது அறிந்து புலவர், கோவூர்கிழார், விரைந்து உறையூர் அடைந்து, இளந்தத்தன், பாடிப் பரிசில் பெறும் புலவனே அல்லது, படை வலிவு அறிய வந்த ஒற்றன் அல்லன் என்பதை விளங்க உரைக்கவே, இளந்தத்தனைப் போக விட்டவன்.84 இளந்தத்தனை விடுவித்தானே ஒழிய உறையூர்க் கோட்டையைக் கைவிட்டான் அல்லன், நெடுங்கிள்ளி, அதனால் நலங்கிள்ளி, உறையூர்க் கோட்டையை வளைத்துக் கொண்டான். அது அறிந்த கோவூர்கிழார், தம் அறிவுரை கேட்டு ஆவூர்க்கோட்டையையும் கைவிடுக எனக் கேட்பது முறையாகாது என்பதால், நலங்கிள்ளியை அணுகி, முற்றுகையை விடுமாறு, கேட்டுக் கொள்ள, உறையூர் முற்றுகை தகர்ந்தது.85

ஆனால், 47ஆம் எண் புறநானூற்றுக் கொளுவும், மணிமேகலை 124—127 வரிகளும் 'காரியாற்றுத் துஞ்சிய' என்ற அடைகொடுத்து முறையே நெடுங்கிள்ளி, மாவண்கிள்ளி என்பான் ஒருவனைக் கூறுகின்றன. மேலும், மணிமேகலை, அப்போரில் பங்கு கொண்ட சோழன் பகைவர்களாகப் பாண்டியனையும், சேரனையும் குறிப்பிடுகிறது. அதனால், இரு கோட்டைகளைக் கோட்டை விட்ட நெடுங்கிள்ளியும், காரியாற்றுத்துஞ்சிய நெடுங்கிள்ளியும், ஒருவர்தாமா? வேறு வேறா என்பதை முடிவு செய்வதில் சிறிது, விழிப்பு வேண்டும்.