பக்கம்:தமிழக வரலாறு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

99


அவரைத் தொடர்பு படுத்தின் தமிழுக்கும் தமிழ் நாட்டுக்கும் தொன்மை தேடித்தந்த பெருமை உண்டாகுமே என்ற காரணத்தால் மறுக்கின்றனர். அது பொருந்தாது.

‘பல்புகழ் பிறைந்த வெல்போர் நந்தர்’

என்றும்,

‘கந்தர் வெறுக்கை எய்தினும் தங்கலர்’

என்றும்,

‘முரண்மிகு வரசர் முன்னுற மோரியர்’

என்றும்,

மாமூலர் தாம் பாடிய அகப்பாடல்களுக்கு இடையிடையே நந்தரையும் மோரியரையும் அமைத்துப் பாட்டிசைக்கின்றார்.

தலைவன் தலைவியை விட்டுப்பிரிய, அவன் பிரிவினையே எண்ணி ஏங்குகின்றாள் தலைவி. அவள் வாட்டம் அறிந்து அதைப் போக்க விழைகின்றாள் தோழி. ‘தோழி! அவர் உன்னை விட்டுப் பிரிந்து தங்கி வாழ்வாரோ? வாழார்; எத்துணைப் பெருஞ்செல்வம் பெரினும் அங்கே தங்கார்; நந்தர் தம் பெருஞ்செல்வம் பெற்றாலும் தங்கார்’ என்று நந்தர் செல்வமே நாட்டில் பெருஞ்செல்வமெனக் குறித்து ‘அது பெறினும் தங்காது உனக்காக வந்து விடுவார்’ எனக் கூறுகின்றாள்.

‘நாம்படர் கூரும் அருந்துயர் கேட்பின்
நந்தர் வெறும்கை எய்தினும், மற்றவன்
தங்கலர் வாழி தோழி!’

(அகம். 251)

என்பது மாமூலர் வாக்கு. எனவே, நந்தர் செல்வம் சிறந்ததாகப் போற்றப்படுகின்றது. இதே பாட்டிலே தான் அந்த வம்ப மோரியரது தென்னாட்டுப்படை எடுப்பும் பேசப்படுகிறது. இவர்கள் நந்தர்களை வென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/101&oldid=1357736" இலிருந்து மீள்விக்கப்பட்டது