பக்கம்:தமிழக வரலாறு.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வரலாற்றுக்கு முன் வடக்கும் தெற்கும்

101


இந்த மோரியரைக் குறிக்கின்றார். அறத்துறை நின்ற ஆதநூங்கனை மறவாத புலவர் ஆத நூங்கனின் சிறப்பை,


                                                     ......வென்வேல்
விண்பொரு நெடுங்குடைக் கொடிதேர் மோரியர்
நிண்கதிர் திகிரி திரிதரக் குறைந்த
உலக விடைகழி மறைவாய் நிலைஇவ
மலர்வாய் மண்டிலத் தன்ன நாளும்
மலர்புர வெதிர்ந்த அறந்துறை பின்னே (புறம். 175)

என்று பாராட்டுகின்றார். இதில் வரும் மோரியர் என்ற சொல்லுக்குப் பொருள் கூறும் பழைய உரையாசிரியர் ‘நில முழுவதும் ஆண்ட வேந்தர்’ என்று உரை எழுதியுள்ளாராம். அதற்குப் பிள்ளை அவர்கள், ‘மோரியர் ஓர் இனமாயின் இன்ன இனத்தவர் எனக் குறித்திருப்பர். பொதுவாக நில முழுவதும் ஆண்டவர் எனக்குறித்ததனால் அவர்கள் வடநாட்டு வேந்தர்கள் அல்லர்’ என்கின்றார். இது எப்படிப் பொருந்தும்? சிறு தமிழ் நாட்டை மூன்று துண்டாக்கி ஆண்ட சேர சோழ பாண்டியரையும், அவர் கீழ் வாழ்ந்த பிற சிற்றரசரையும் நோக்க, வடவிந்தியப் பரந்த நிலப்பரப்பையும் தென்னிந்தியப் பகுதியில் சிலவற்றையும் ஆண்ட மோரியர் நில முழுவதும் ஆண்ட வேந்தர் அல்லரோ? இந்திய வரலாற்றிலேயே முதன் முதல் பரந்த நிலப்பரப்பை ஆண்டவர் மோரியர் தாமே? அவர்களைப் பற்றி உரையில் அவ்வாறு புகழ்ந்திருத்தல் தவறாகாதே! மேலும், வடக்கே ஆண்ட அவர்களுடன் தொடர்பு ஏற்படக் காரணம் இல்லை என்கிறார் அவர். கோசர்கள் மோகூர்ப் பழையனுக்கு அமைச்சராகவும், சேனா வீரராகவும் அமைந்தவர்கள் ஆதலின், அவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/103&oldid=1357824" இலிருந்து மீள்விக்கப்பட்டது