பக்கம்:தமிழக வரலாறு.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

178

தமிழக வரலாறு


ஆயினும் அந்த இடைக்காலத்தில் தமிழ் நாட்டில் எத்தனையோ ஆயிரமாயிரம் ஆண்டுகளில் நடை பெறாத பல மாற்றங்கள் நடந்துவிட்டன. தமிழ் நாடு இரண்டாம் நூற்றாண்டின் நிலையையும் ஏழாம் நூற்றாண்டின் நிலையையும் ஒத்து நோக்கின் இவ்வுண்மை புலனாகும்.

மேலை நாட்டு வாணிபம்:

இந்த இருண்ட காலத்திலும் தமிழ் நாட்டில் நடை பெற்றுக்கொண்டிருந்த மேலை நாட்டு வாணிபம் தொடர்ந்து நடைபெற்றதாக அறிகிறோம். தாலமி, பெரி புளுஸ் போன்றவர்கள் தமிழ் நாட்டைப்பற்றிக் கூறியுள்ளவை அக்காலத்தில் உரோம நாடு முதலியவற்றிக்கும் தமிழ் நாட்டுக்கும் இடையில் நடை பெற்ற வாணிபத்தைக் காட்டுகின்றன. சங்க இலக்கியத்தில் காணும் யவனரும் பிறரும் இந்த இருண்ட காலத்திலும் இங்கிருந்து வாணிபம் செய்து வந்தனர் போலும். இந்த இருண்ட காலத்திலேதான் பிற தலை நகரங்களோடு காஞ்சிபுரம் தலை சிறந்து விளங்கிற்று. எனினும், பழம்பெரு நகரங்களை நினைத்தால், அவை கெட்ட நிலை அறிந்து தமிழர் உளம் நடுங்குவர்.

நகரங்கள்: காஞ்சி

சங்க இலக்கியத்தில் கண்ட புகார் என்னும் காவிரிப்பூம்பட்டினமும் வஞ்சி மாநகரும், இருண்ட காலத்திலோ, அன்றி அதற்குச் சற்று முன்னே நிலை கெட்டண எனலாம். புகார் அழிவைப்பற்றி மணிமேகலை விளக்கமாக உரைக்கின்றது. சோழன் இந்திர விழாவை நிறுத்திய காரணத்தால் புகாரைக் கடல் கொண்டது என்பர். அக்காலந்தான் இளந்திரையன் நாககன்னி கையால் அனுப்பப்பட்ட காலம். அவ்விளந்திரையன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/180&oldid=1358151" இலிருந்து மீள்விக்கப்பட்டது