பக்கம்:தமிழக வரலாறு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

தமிழக வரலாறு


அவற்றின் கொள்கைகளை விளக்கப் பல வடமொழிச் சொற்களைத் தமிழில் புகுத்தி இருக்க வேண்டுமன்றோ! இவ்வாறு வடமொழி மிகுந்தது. அதற்கு முன் சங்கத்தில் வந்த வைதிக சமயத்தவர் வடமொழிவழித் தம் சமயம் பரப்ப விழைந்தும், அது இயலாததாயிற்று. இந்த இருண்ட காலத்தில் அதுவும் எளிதாய் முடிந்தது.

சமய மாறுபாடுகள்:

பெளத்தமும் சமணமும் தம்முள் மாறுபட்டு நாட்டில் ஒன்றை ஒன்று விஞ்சி வளர்ந்துகொண்டிருக்கும் அதேவேளையில், தமிழ்நாட்டிலே பழைமையாய் நின்ற சைவமும் வைணவமும் அவற்றோடு கலக்க முயன்ற வைதிக சமயமும் வாளா உறங்கிக்கிடக்கவில்லை எனலாம். இந்த இருண்ட காலத்திலிருந்த ஒரு சிற்றரசன் கோச்செங்கட் சோழன். இவன் சிவனுக்கும் விஷ்ணுவுக்கும் பலப்பல கோயில்கள் கட்டினவன் என அறிகின்றோம். காப்பிய காலத்திலேயே தலைநகரங்களில் பலப்பல தெய்வங்களும், அவற்றின் கோயில்களும் அவற்றை வழிபடும் முறைகளும் பெருகிவிட்டன என்பதையும் முன்பு அறிந்தோம். எனினும், சங்ககாலத்தில் அவை போன்ற கோயில்களைக் காண இயலாது அன்றோ! காப்பிய காலத்தில் தோன்றி வளர்ந்த அந்தச் சமயக் கோயில்கள் ஒன்றொடொன்று போட்டியிட்ட மூன்று சமயங்கள் வாயிலாக இருண்ட காலத்தில் பெருகிப் பலவாயின. எனினும், ஏழாம் நூற்றாண்டில் பெளத்தம் சமணம் இரண்டும் நிலைகெட, மேலோங்கிய சைவ வைணவக் கோயில்களே நாடெங்கும் நிரம்பி நின்றன. அவற்றைப் பின் வந்த நாயன்மார்களும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/184&oldid=1358160" இலிருந்து மீள்விக்கப்பட்டது