பக்கம்:தமிழக வரலாறு.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சியில் பல்லவர்

189


சிம்மவிஷ்ணுவுக்கும் முன்பும் பல பல்லவ அரசர்கள் ஆண்டு மறைந்துள்ளனர். குமார விஷ்ணு, கந்தவர்மன், வீரகூர்ச்சரவர்மன், கந்தசிஷ்யன் (கந்தவர்மன் II), சிம்ம வர்மன், குமாரவிஷ்ணு II, கந்தவர்மன் III, சிம்மவர்மன் II, குமாரவிஷ்ணு III, விஷ்ணுகோபவர்மன், சிம்மவர்மன் III, சிம்மவிஷ்ணு ஆகியோர் ஆண்டார்கள் என்று முறைப்படுத்திக் காட்டுகின்றார் இவர்கள் காலமெல்லாம் தமிழர் முறைக்கு மாறுபட்ட நிலையிலே ஆட்சியும் அமைப்பும் பொருந்திய காரணத்தாலும், இவர்களுள் பெரும்பாலோர் ஆட்சி காஞ்சிக்கு அப்பாலே நின்ற காரணத்தாலும் தமிழக வரலாற்றுக்கும் இவர்களுக்கும் பெரும்பாலும் தொடர்பு இல்லை எனலாம். இவர்கள் காலத்தில் நாம் இருண்ட காலத்தில் கண்ட பல அந்நியர் படை எடுப்புக்களும் குழப்பங்களும் நாட்டில் நிகழ்ந்துள்ளன. இக்காலத்திலேதான் வடக்கில் சாளுக்கியர் தோன்றினர். இச் சாளுக்கியருக்கும் பின் வந்த பல்லவருக்கும் தீராப்போர் நடைபெற்றதைப்பின் காண்போம். இவ்வாறு பிராகிருத, வடமொழிப் பல்லவர்தம் காலங்களெல்லாம் கழிய, சிம்மவிஷ்ணுவின் மகன் மகேந்திரன் ஏழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் காஞ்சியில் அரியணை ஏறினான். அவனும் அவன் பரம்பரையினருமே தமிழக வரலாற்றைச் சிறக்கச் செய்தவர்களாவார்கள். இவன் தந்தையாகிய சிம்மவிஷ்ணுவே முதல் முதல் பேர்பெற்ற பல்லவன். எனினும் அவன் தமிழ்மொழிக்கும் தமிழ்க்கலைக்கும் அத்துணைச் சிறந்த தொண்டு செய்தவன் என்று கொள்ளத் தக்கவன் அல்லன். அவன் மாற்றரசர்களோடு போரிட்டுத் தன் நாட்டு எல்லையைப் பெருக்கித் தன் மகனிடம் அளித்தான். அவன் அறிவாளி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/191&oldid=1358442" இலிருந்து மீள்விக்கப்பட்டது