பக்கம்:தமிழக வரலாறு.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

196

தமிழக வரலாறு


பெற்றது. அவன் சிற்பங்கள் வாதாபிச் சிற்பங்களை ஒத்துள்ளன என்பர். புலிகேசியை வென்று வாதாபியைக் கொண்டபின் அங்குள்ள சிற்பங்களைக் கண்டு அவ்வழியே தன்னாட்டிலும் இச்சிற்பங்களைச் செய்தான் என்பது பொருந்தும். மாமல்லபுரத்தில் உள்ள அவன் குடைவித்த கற்கோயில்கள் ‘இரதங்கள்’ என்ற பெயர்களோடு இன்றளவும் உலக மக்கள் கானும் கலைப் பெட்டகமாக விளங்கிவருகின்றன. இம்மாதிரிக் கோயில்களைத் தவிர, அவன் பாறைகளில் கதைகளைக் குறிக்கும் பல சிற்பங்களையும் பொறித்துள்ளான். அவற்றுள் இரண்டு மாமல்லபுரத்தில் பாதுகாக்கப்பெறுகின்றன. கோயிலும் சிற்பமும் தவிர்த்துக் கோட்டையும் கட்டினான் நரசிம்மன்.[1]

அக்காலத்தில் தமிழ் நாட்டில் சேரரும் சோழரும் சிற்றரசர்களாய் இருந்தனர் எனக்கண்டோம். பாண்டியர் மரபே தலை தூக்கி நின்றது. கடுங்கோன் (கி.பி. 575-600), சேந்தன் சயந்தவர்மன் (625-650), பின் நெடுமாறன் (கி.பி 640 680) என்ற மூவரும் அக்காலப் பாண்டியராவார்கள். அக்காலத்தில்தான் சீர்காழியில் தோன்றிய ஞானசம்பந்தர் தமிழ்நாடு முழுவதும் சுற்றிச் சைவம் வளர்த்தார்; பாண்டியனைச் சமண சமயத்திலிருந்து சைவ சமயத்துக்கு மாற்றினார். ஆகவே, மகேந்திரன் காலத்தைப் போலவே அவன் காலத்திலும் திருநாவுக்கரசரும் திருஞான சம்பந்தரும் சைவப் பதிகங்களைப் பாடித் தேவாரத்தைத் தோற்றுவித்தனர். பிரபந்தம் பாடிய ஆழ்வாருள் முதன் மூன்று ஆழ்வாரும் அவன் காலத்தில் இருந்தவரே என்பர் P.T.

  1. பல்லவர் வரலாறு,டாக்டர் இராசமாணிக்கம். பக் 131
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/198&oldid=1358503" இலிருந்து மீள்விக்கப்பட்டது