பக்கம்:தமிழக வரலாறு.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச் சோழர் எழுச்சி

217


பின்பு கி.பி. 862இல் பாண்டியன் மாறவர்மனும் பல்லவன் நிருபதுங்கனும் வாழவில்லை. இரண்டாம் வரகுணன் பாண்டி நாட்டு மன்னனாகி அரியணை ஏறினான். நிருபதுங்கனுக்குப்பின் காஞ்சியில் அபராஜி தன் அரசனாயினான். சோழன் விசயாலயன் வயதாகி வலி குன்றியிருந்தான். அவன் மகன் ஆதித்தன் கி.பி. 871இல் பட்டம் எய்தினான். தந்தை வயதானவரானமையின், அவன் இருக்கும் போதே அரியணை ஏறி, மாற்றாரை ஒடுக்க முயன்றான் கி.பி. 880ல் பாண்டியன் வரகுணன் சோழநாட்டின்மேல் படை எடுத்து, ‘இடவை’யைத் தாக்கினான். ஆதித்தன் எதிர்த்துப் போரிட்ட போதிலும் அவன் நாடு பலவகையில் இன்னலுற்றது எனலாம். பின்னர் ஆதித்தன் பல்லவன் அபராஜிதனையும் முதலாம் பிருதிவிபதியாகிய கங்க வேந்தனையும் துணையாகக் கொண்டு பாண்டியனை எதிர்த்துத் திருப்புறம் பயத்தில் போர் தொடுத்தான். இத்திரும்புறம்பயப் போரே இடைக்கால வரலாற்றில் முக்கிய இடம் பெற்றது. முதலாம் பிருதிவிபதி போர்க்களத்தில் இறந்தான். எனினும், பாண்டியன் வெற்றி பெறவில்லை. சோழ பல்லவர் முன் நிற்கமாட்டது பாண்டியன் வரகுணன் தோற்று ஓடினான் அவ்வெற்றியே சோழர் வளர்ச்சியின் தொடக்கமாயமைந்தது. பின்பு வரகுணன் சிலகாலம் வெளிவரவில்லை எனலாம். அபராஜிதன் சோழநாட்டை ஆதித்தனுக்கு அளித்துக் காஞ்சிபுரம் சென்றான். பின், ஆதித்தன் தன் நாட்டு எல்லையைச் சிறிதுசிறிதாகப் பெருக்கிக்கொண்டான். பாண்டியரும் பல்லவரும் தாழச்சோழப் பேரரசு தஞ்சையில் தலை தூக்கிற்று இவ்வாறு சோழப் பேரரசு வளர திருப்புறம்பயப் போர் தமிழ்நாட்டு வரலாற்றில் ஒரு திருப்பு மையமாய் அமைதது எனலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/219&oldid=1358726" இலிருந்து மீள்விக்கப்பட்டது