பக்கம்:தமிழக வரலாறு.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

218

தமிழக வரலாறு


ஆதித்தன் :

ஆதித்தன் கி.பி 872முதல் முதல் 907வரை அரசாண்டான். இவன் காலத்தில் தொண்டை நாடு முழுவதும் இவன் கீழ்வந்தது எனலாம். ‘தொண்டை நாடு பரவின சோழன்’ எனவே இவன் வழங்கப்பெற்றிருக்கின்றான். தொண்டை நாட்டில் திருக்கழுக்குன்றம் முதலிய ஊர்களில் இவன் கல்வெட்டுக்கள் உள்ளன. அபராஜிதனுக்கும் பின் பல்லவர் பரம்பரையில் யாரும் இன்மையின் தொண்டை நாடு முழுதும் இவன் கீழ் உற்றது இயல்பேயாகும். இவனுக்குச் சேர மன்னன் தாணுரவி உற்ற நண்பனாய் இருந்தான். மேற்கே உள்ள கொங்கு நாட்டையும் ஆதித்தன் தன் கீழ்ப்படுத்திக் கொண்டான். எனவே சோழ நாட்டு எல்லை விரிந்தது. தன் விரிந்த நாட்டில் ஆதித்தன் பல கோயில்கள் கட்டினான். இச்சோழர் பரம்பரையினர் அனைவரும் சைவரே யாவர்; எனிலும், பிற சமயங்களில் மாறுபாடு கொண்டவரல்லர். சோழருள் சிலர் வைணவத்தை வெறுத்திருக்கலாம். இவர்கள் காலத்தில் பெளத்தம் சமணம் இரண்டும் நிலைபெற்று இல்லாமையின், சைவம் வைணவம் என்ற இரு சமயங்களே நாட்டில் எங்கும் பரவி நிறைந்திருந்தன. ஆதித்தன் பல சிவன் கோயில்களைக் கட்டினான். இவனது பட்டத்தரசி பல்லவகுலத்தில் பிறந்த திரிபுவனமாதேவி என்பாள். அக்குலத்தில் பெண் கொண்டமையே அபராஜிதனை இவனோடு நண்பனாய் இருக்கச் செய்தது; பின்பு தொண்டை நாட்டையும் கொள்ள வைத்தது. அவ்வரசி கோயில்களுக்குப் பலவகையில் தானம் செய்தான் அவர்களுக்குப் பராந்தகன், கன்னரதேவன் எனும் இருவரும் புதல்வர்; அவர்களுள் பராந்தகனே அடுத்துப் பட்ட மெய்தினான். தமிழ் நாட்டு வடவெல்லை வரையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/220&oldid=1358729" இலிருந்து மீள்விக்கப்பட்டது