பக்கம்:தமிழக வரலாறு.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்காலச்சோழர் எழுச்சி

231


டம் ஹொட்டூர் கல்வெட்டு (1007) ஒன்று குறிக்கின்றது. இவன் ஆட்சி எல்லை வடமேற்கே துங்கபத்திரை ஆறு வரை பரவியிருந்தது எனலாம்.

அடுத்து வடக்கே கோதாவரி கிருஷ்ணை ஆறுகளுக்கு இடையிலுள்ள வேங்கை நாட்டின்மேல் இராசராசன் போர் தொடுத்தான். அங்கு ஆண்ட கீழைச் சாளுக்கிய மன்னனாகிய சத்திவர்மன் சோழனிடம் அடைக்கலம் புகுந்தான். சத்திவர்மன் மகனாகிய விமலாதித்தனே, பின் இராசராசன் மகளாகிய குந்தவ்வையை மணம் புரிந்து கொண்டவன். எனவே, கீழைச்சாளுக்கியர் சோழருடன் நட்பினராகவே இருந்து வந்தனர்.

பின்னர் இராசராசன் நெல்லூர் மாவட்டத்தின் வட பகுதிகளாகிய சீட்புலி நாடு, பாகி நாடு முதலியவற்றின்மேல் படை எடுத்து வெற்றி கண்டான். அவற்றுடன் மகாநதிக் கரையிலுள்ள கலிங்க நாட்டிற்கும் (தற்போதைய ஒரிசா) அவன் படையெடுத்து வெற்றி கண்டான். அங்கும் இராசராசன் கல்வெட்டுக்கள் உள்ளனவாம்.

கடல் கடந்தும் போர்

இறுதியாக முன்னீர்ப் பழந்தீவு பன்னீ ராயிரத்தை இவன் வென்றுகொண்டான் என்று கல்வெட்டுக்கள் குறிக்கின்றன. இது அரபிக்கடலிலுள்ள லட்சத் தீவுகள்–மால்டாத் தீவுகள் என்பர் ஆய்வாளர். சேர நாட்டுக்குத் தென் மேற்கே உள்ள அத்தீவுகளில் வாழ்வோரால் சேர நாட்டுக் கடல் எல்லையில் அடிக்கடித் தொல்லை நேர்ந்திருக்கக்கூடும் ஒரு வேளை சேர பாண்டி நாடுகளில் தோற்ற பகைவர் சிலர் அங்குச்சென்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/233&oldid=1358797" இலிருந்து மீள்விக்கப்பட்டது