பக்கம்:தமிழக வரலாறு.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பிற்கால சோழர் எழுச்சி

255


கோட்டம் அமைத்தான் தேர் செய்தான்; குளம் வெட்டினான்; பசு எருது, யானை முதலியவற்றைக் கோயிலுக்கு வழங்கினான். எனினும், இவன் தில்லையில் செய்த ஒரு செயல் அவனுக்கு இழுக்குத் தேடித்தந்தது. பிற சமயங்களில் வெறுப்புக் கொள்ளாதவனாயினும், தில்லை நடராசர் மேலிருந்த பற்றின் காரணமாக, அக்கோயிலில் நந்திவர்மப் பல்லவமன்னனால் எட்டாம் நூற்றாண்டில் அமைக்கப்பெற்ற திருமால் படிமத்தைக் கடலில் எறிந்தான். இதனால் வைணவர் நொந்தனர். மேலே காட்டிய பணிகளுள் சில இவன் தந்தையால் தொடங்கப் பெற்று இவனால் முடிக்கப் பெற்றன என்பர். நாட்டில் போரில்லை எனினும் எல்லை சுருங்காமலே இருந்தது. இவன் நல்ல கலைப்புலமை உடையவன். எனவே, ஒட்டக்கூத்தரிடம் பெருமதிப்பு வைத்திருந் தான். இவனை அவர் பலவாறு பாராட்டுகிறார். நாட்டு அமைதி இவனைக் கலை வினோதனாக்கியது. இவன்மேல் பிள்ளைத் தமிழ் பாடினார் கூத்தர். தமிழில் தண்டியலங்காரம் செய்த தண்டியாசிரியர் இவன் அவைக்களப் புலவருள் ஒருவர். (மேலே பல்லவர் காலத்தில் வட மொழித தண்டி ஆசிரியரைக் கண்டோம்.) கம்பர், சேக்கிழார் இருவரும் இவன் காலத்தவர் என்பர். அக்கூற்று ஆராய்தற்குரியதாகும். இருவரும் ஒரே காலத்தவர் அல்லர் என்பது பலருடைய கருத்தாகும்; அதுதான் உண்மையுங்கூட. இவன் தலைநகரும் கங்கை கொண்ட சோழபுரமே. ஆயினும், இவன் தில்லையிலும் நெடுங் காலம் தங்கினான். இவனுக்கு அநபாயன், அபயன் எதிரிலிப் பெருமாள், கலி கடிந்தான், திருநீற்றுச் சோழன், பெரிய பெருமாள் எனப் பல பட்டங்கள் இருந்தன. இவற்றின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/257&oldid=1357882" இலிருந்து மீள்விக்கப்பட்டது