பக்கம்:தமிழக வரலாறு.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

262

தமிழக வரலாறு


திரிபுவன வீரதேவன், முடித்தலைக் ககொண்டான், இராசாக்கள் தம்பிரான், உலகுய்ய வந்தான். தனி நாயகன் என்பன போன்ற பெயர்கள் இவனுடையன.

இவன் காலத்தில் ஆட்சியாண்டு 12, 13ல் தொண்டை நாட்டில் மழையால் பஞ்சமும், 23, 24ல் நடுநாட்டில் மழை இன்மையால் பஞ்சமும் உண்டாயின. பஞ்சகாலத் தில் நாட்டில் வாழ்ந்த செல்வர்கள் உதவிய சிறப்புக்களை யெல்லாம் கல்வெட்டுக்கள் நன்கு குறிக்கின்றன. இவன் காலத்தில் சைவத் துறவியரின் குகைகளையும் மடங்களையும் வடநாட்டுப் பிராமணர்கள் அழித்தார்களாம். அவற்றை இவன் மகன் மூன்றாம் இராசராசன் செப்பம் செய்தான்.

ஆட்சியில் உள்ள சிற்றரசரும் அதிகாரிகளும்:

இவன் ஆட்சி ஆண்டு 38ல் நாடு மறுபடியும் அளக்கப் பெற்றது. இப்படி ஒரு நூற்றாண்டுக்கு ஒரு முறை சோழர் காலத்தில் நாட்டு நிலம் அளக்கப் பெற்றது போலும்! இவன் ஆட்சியில் இருக்கும் போதே தன் மகன் இராசராசனுக்கு இளவரசுப் பட்டம் கட்டினான். இவன் காலத்தில் சில சிற்றரசர் ஆண்டு வந்தனர். இவன் காலத்துக்குப் பின் சோழப் பேரரசு சிதறலாயிற்று எனலாம் சிற்றரசர் இறுதியாக இவனுக்குத்தான் திறை செலுத்தினர் போலும்! எனவே, சோழர் வரலாற்றின் உச்சநிலை இவனோடு முடிவடைகின்றது. அதனால் இவன் காலத் திருந்த சில அரசியல் அதிகாரிகளையும் அவர்தம் அலுவல்களையும் காணல் பொருத்தமானதாகும் ஒவ்வொரு பேரரசன் கீழும் நல்ல அரசியல் அதிகாரிகள் இருந்தார் கள் எனக் கண்டு கொண்டே வந்தோம். இங்கு நம் குலோத்துங்கள் கீழ் இருந்த அரசியல் அதிகாரிகளையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/264&oldid=1357940" இலிருந்து மீள்விக்கப்பட்டது