பக்கம்:தமிழக வரலாறு.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

273



கருத்தறிந்தே பிற்காலச் சோழர் பணி புரிந்தனர். அரசன் சட்டம் இயற்றுபவனாய் இல்லை; சட்டத்தையும் அமைதியையும் காப்பவனாகவே இருந்தான். அமைச்சர்களும் மிக எளிமையாகவே அரசனது ஆணையை நிறைவேற்றி வந்தனர். ஏனாதி, மாராயன் போன்ற அரசியல் அதிகாரிகளும் அரசகாரியங்களைக் கவனித்து வந்தனர்.

ஆட்சி அதிகாரிகள்:

கோயில் மக்கள் வாழ்வில் முக்கிய இடம் பெற்ற காரணத்தால் கோயிலுக்கு ஊறுசெய்பவர்களையும், கோயில் வருவாயை அழிப்பவர்களையும் அரசன் தானே நன்கு அறிந்து ஒறுத்து வந்தான் எனலாம். அமைச்சரும் பிற அதிகாரிகளும் தவிர்த்து அரசருக்குத் திருமுகம் எழுதுவோரும் இருந்தனர். அவர்கள் மந்திர ஒலை, மந்திர ஓலை நாயகம், விடையில் அதிகாரி எனச் சிறப்பாக வழங்கப் பெற்றனர். நிலங்களின் தரமறிந்து அவற்றிற்கு வரி விதிப் பதற்காகப் புரவு வரித் திணைக்களம் (Dept. of Land Revenue) என்ற பகுதி ஒன்று இருந்தது. நாட்டில் நடை பெறும் அரசியல் தொழில்களை (Public Works) மேற்பார்வை செய்யக் கங்காணிகள் (Supervisors) இருந்தனர். கோயில் வரவு செலவு கணக்குகளைக் காணும் அதிகாரிகளும்(Commissioner of Endowments) கிராமசபைகளின் பணிகளை ஆராய்ந்து முத்திரை இடுவோரும் (Panchayat officers) இருந்தனர். இவர்களையன்றி, மாமண்டலேச்சுரர் என்ற மண்டலங்களைக் காப்போரும், உடன் கூட்டத்து அதிகாரிகளும் அரசன் ஆணையினை மக்களுக்கு இடை நின்று அறிவித்து மக்-

18

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/275&oldid=1358032" இலிருந்து மீள்விக்கப்பட்டது