பக்கம்:தமிழக வரலாறு.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

272

தமிழக வரலாறு



இருவகை வழக்குப் பற்றியும் நமக்கு யாதோர் ஆதாரமும் இல்லை யாகையால் எதையும் திட்டமாகக் கொள்ள முடியாது.

படைகள்:

அரசர்களுக்குப் பெருஞ்சேனை இன்றேல் இத்துனைப் போர்கள் செய்திருக்க முடியாது; கடற்படை, தரைப்படை இரண்டும் இருந்தன. தரைப்படையில் தேர்ப்படை தவிர, யானை, குதிரை, காலாட்படைகளும் இருந்தன எனலாம். சேனைக்கு உதவி செய்யப் பணியாளர்களும் (தற்காலச் செஞ்சிலுவைச் சங்கத்தார் போன்று) பலர் இருந்தார்கள் என்று காண்கின்றோம். அரச சபையிலும் பிற முக்கியமான இடங்களிலும் பிராமணர்கள் இடம் பெற்றிருந்தார்கள். அவர்களுக்குச் சோழர்கள் வரியிலா நிலங்களையும் பொன்னையும் மணியையும் வாரி வழங்கினார்கள். இரணியகர்ப்பமும் துலாபாரமும் இவர்கள் காலத்தில் சாதாரண நிகழ்ச்சிகளாக இருந்தன போர்க் காலங்களில் சேனையில் உள்ளவர் மட்டுமேயன்றி, பொது மக்களும் போர்களில் கலந்து கொள்வார்களாம். போரில் வெற்றி காண்கையில் ஊரை அழிப்பதோடு சமூக நிலைக்களன்களாய் இருந்த கோயில் களையும் அழிப்பார்கள் போலும்! படைகள் இருக்கு மிடத்தைக் கடகம் (மண்ணைக் கடகம்) என வழங்கினர். கடகம் என்பதற்குப் படை என்ற பொருள் உள்ளமை பிற்கால இலக்கியங்களால் அறியலாம்.

அரசன் நாட்டை ஆள்பவனாய் இருந்தபோதிலும் அவன் தன் விருப்பம் போல நாட்டு வாழ்வைத் திருத்த வில்லை எனலாம். மக்களைக் கலந்தே-அவர்கள் தேவை அறிந்தே-மன்னன் மக்களுக்கு உதவி வந்தான் தனி மனிதன் எண்ணத்துக்குச் சிறப்புத் தாராது பொதுமக்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/274&oldid=1358024" இலிருந்து மீள்விக்கப்பட்டது