பக்கம்:தமிழக வரலாறு.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சோழர் காலத்துத் தமிழகம்

271


களில் இன்றளவும் அதே பெயர்களுடன் விளங்குவதைக் காணலாம். இப்படி முத்தமிழ் வளர்த்ததோடு, கோயில்களில் சிற்பங்கள், ஒவியங்கள் முதலியன அமைத்து அக் கலைகளையும் வளர்த்தனர். அக்காலத்தில் கோயில்களின் அமைப்பை நோக்கினால், கட்டடக் கலையில் சோழர் காட்டிய ஆர்வம் நன்கு விளங்கும் கடவுளர் உருவங்களோடு சிறந்த மன்னரும் மக்களும் தத்தம் முன்னோர் விக்கிரகங்களையும் கோயில்களில் அமைத்ததைக் காண்கிறோம்.

கோயில் கர்ப்பக்கிருக இலிங்கத்தின் அடியில் சில இடங்களில் எலும்புகள் இருக்கக்காண்கிறோம். இக்காலத்தில் திருப்பணி செய்யப் பலர் முன் வந்து சோழர் கோயில்கள் பல பழுதுற்றிருப்பதைச் சீர்திருத்தியுள்ளனர். அவர்கள் அவ்வாறு செப்பம் செய்யுங்கால் கருவறைகளை, அகழ்ந்து இலிங்கங்களை அப்புறப்படுத்தும் போது எலும்புகள் சிலவிடங்களில் கிடைக்கின்றன. இவை எதற்காக இருக்கின்றன என்பது திட்டமாகத் தெரியவில்லை. எனினும், புத்தர் வழிபாட்டில் இலங்கை நாட்டுக் கண்டி நகரில் எலும்பாகிய பல்லே முக்கியமாகப் போற்றப்படுவது போன்று அன்று தமிழ் நாட்டில் எலும்பினை ஏற்றம் தந்து போற்றினார்களா என்பதும் தெரியவில்லை. (கண்டி என்பதற்குச் சிங்கள மொழியில் பல் என்பது பொருள்.) அன்றிச் சிறந்த அடியவர்களை அடக்கம் செய்த இடங்கள் பிற்காலத்தில் பெருங்கோயில்கள் ஆயின என்று கொள்ளவும் வழி உண்டு, பிற்காலத்தில் மறைந்த பல பெரியவர்களைச் சமாதி செய்து அதன் மேல் கோயில் எழுப்பும் வழக்கத்தைக் காண்கின்றோம். எனினும், இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/273&oldid=1358021" இலிருந்து மீள்விக்கப்பட்டது