பக்கம்:தமிழக வரலாறு.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எது வரலாறு?

27


என்ற பேராசிரியர் வடநாட்டிற்கும் தென்னாட்டிற்கும் உள்ள கொள்கைப் போராட்டத்தைச் சுட்டிக்காட்டி, அது மூவாயிரம் ஆண்டுகளாக நடைபெற்றுவரும் ஒன்று என்றும், வடநாடு தென்னாட்டை அடக்கி விட்டதாகக் கருதிய போதிலும், அப்போராட்டம் இன்னும் ஓயவில்லை என்றும் குறிக்கின்றார்.[1] அவரே வடநாட்டைக் காட்டிலும் தென்னாடு காலத்தால் முந்தியதென்றும் அதன் பாறைகளும் நில அமைப்பும் அவ்வுண்மையை நன்கு புலப்படுத்துகின்றனவென்றும் கூறுகின்றார்.[2] மேலும் இந்தியாவில் முதன் முதல் மனிதன் தோன்றி வாழ்ந்த இடம் அந்தத் தென்னாட்டு உயரிடமேயன்றி வடநாட்டுச் சமவெளி அன்று என்பதைத் தெள்ளத் தெளியக் காட்டுகின்றார்.[3]

இவ்வாறெல்லாம் கூறி, இந்திய நாட்டுப் பழங்கால வரலாற்றை அறியத்தக்க சாதனங்கள் பல தமிழ்நாட்டு மண்ணில் புதையுண்டுள்ளமையைக் காட்டுகின்றார் அவர். எனவே, வடநாட்டு வரலாற்றை ஒத்துத் தென்னிந்திய வரலாறும், சிறப்பாகத் தமிழ்நாட்டு வரலாறும் நன்கு எழுதப்படவேண்டும் என்பதை அவர் எடுத்துக் காட்டுகின்றார். ஆனால், இன்று வரை இந்திய வரலாற்று ஆசிரியர்கள் அந்த நெறியை மேற்கொள்ளவில்லை எனலாம்.

கொள்கை அளவில் தென்னிந்திய நாகரிகம் வட இந்திய நாகரிகத்துக்கு முற்பட்டது என்று ஒத்துக்கொள்-


  1. 1. The conflict between the Dravidian ideas of the South and the Indo-Aryan ideas of the North, which has lasted for three thousand years more or less, still continues, although on the surface the victory of the north seems to be complete. (The Oxford History of India, by WASMITH. page 6)
  2. 2, 3, ibid, page 5.
  3. 2, 3, ibid, page 5.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/29&oldid=1357010" இலிருந்து மீள்விக்கப்பட்டது