பக்கம்:தமிழக வரலாறு.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

302

தமிழக வரலாறு



வேலூர், செஞ்சி முதலிய இடங்களில் வாழ்ந்த சிற்றரசர் உரிமை பெற்றனர் எனலாம் மதுரை திருமலை நாயக்கரும் வேலூர், மைசூர் முதலிய இடங்களில் வெற்றி பெற உதவினர். விசயநகர வேந்தரால் ஒன்றும் செய்ய இயவில்லை. எனவே மதுரை நாயக்க வேந்நர் மராட்டிய மன்னர் ஆகியோர் பீஜப்பூருக்குப் பணிந்து நின்றனர். எனினும், இறுதியில் தென்னாட்டில் சிற்றரசர்கள் ஓரளவு உரிமைபெற்று வாழ்ந்தனர். வடக்கே ஒளரங்கசீபு ஆணை தென்னாடுவரை பரவிருயித்தபோதிலும், அவன் இறந்த பிறகு கர்நாடக நவாபுகளே ஆணை செலுத்தினர். இதற்கு முன்பே விசயநகர வேந்தர் ஆட்சி முடிவுற்றமையின், நாம் இங்குப் பதினேழாம் நூற்றாண்டு வரையில் இருந்த தமிழகத்தையே காண்போம். இக்காலத்தில் பல மேலை நாட்டவரும் பிறரும் வந்த வரலாற்றுக் குறிப்புக்களை எழுதிவைத்துச் சென்றுள்ளனர்.[1] அக்குறிப்புக்கள் வரலாற்றுக்குப் பெரிதும் பயன்படுகின்றன.

தமிழ் நாடு அதற்குமுன் காணாதபடி பலவகையில் மாறுபட்டுவிட்டது எனலாம். தெலுங்கு நாட்டிவிருந்து பல்வேறு மக்கள் இங்குக் குடியேறினர். அவ்வாறே மாற்றாகப் பல தமிழ்மக்கள் அந்நாட்டிலும் குறியேறி விட்டனர் எனலாம் நாட்டில் எத்தனையோ வகை யான சாதிகள் வளர்ந்துவிட்டன. ஒவ்வொரு சாதியிலும் எத்தனை எத்தனையோ பிரிவுகள் பெருகிவிட்டன வலங்கை இடங்கைச் சாதிகள் என்று பலப்பல சாதிகள் உருவாகிவிட்டன. பதினான்காம், பதினைந்தாம் நுாற்றாண்டுகளின் இசுலாமியர் படை எடுப்பால் தென்னிந்தியச் சமயநெறி சீரழிந்தது.


  1. 1. Foreign Notices of South India, by K, A. Neelakanda Sastri
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/304&oldid=1358471" இலிருந்து மீள்விக்கப்பட்டது