பக்கம்:தமிழக வரலாறு.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விசயநகர வேந்தரும் மராட்டியரும்

301


தது எனலாம் புக்கர்தம் ஆட்சியின்போதுதான் கி.பி.1347ல் பாமினிப் பேரரசு தோன்றிற்று. அது வளர வளர இந்துக்களுக்குத் தொல்லை மிகுந்தது விசயநகர மன்னரும் ஒருவர் ஒருவராக நாடாண்டனர். எனினும், 1510ல் பட்ட மேற்ற கிருட்டிணதேவராயர் காலத்திலேதான் அதன் எல்லை விரிவடைந்தது. அதன் எல்லை கன்னியகுமாரி வரை பரவிற்று எனலாம். புக்கர் மகன் குமாரகம் பண்ணன் காலத்திலேயே அவன் மாலிக்கர்பூரை வீழ்த்த மதுரை வரை வந்தான் என்று மேலே கண்டோம். எனவே, கிருஷ்ணதேவராயர் காலத்தே அவர்தம் ஆட்சி சிறந்தது நின்ற தென்பதும். அதற்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே விசயநகர வேந்தர் ஆட்சி மதுரை வரையில் பரவியிருந்தது என்பதும் கண்கூடு. இந்த ஆட்சி மறுபடியும் பதினாறாம் நூற்றாண்டின் இறுதியில் இசுலாமியர் கைக்கு மாறி இறுதியாக ஆங்கிலேயர் கைக்கு வந்தது எனலாம். அக்காலத்தில் விசநகர வேந்தரின் கீழ் இருந்த தஞ்சை, மதுரை, செஞ்சி நாட்டு மராட்டிய மன்னரும், மைசூர் மன்னரும் உரிமை பெற்றவராய் நின்றனர். இறுதியில் அனைவரும் இசுலாமியர் வழி ஆங்கிலேயரின் அடிமைகளென்று மாறி, அழிந்தும் திரிந்தும் நிலைகெட்டும் நின்றனர். பீசப்பூர்ச் சுல்தான்கள் படையெடுப்பும் உள்நாட்டுச் சிற்றரசர் உரிமையும் விசயநகர வேந்தர் ஆட்சியை அழித்தன. இறுதியாக 1785ல் திப்புச்சுல்தான் படையெடுப்பின் மூலமே விசயநகர வேந்தர் ஆட்சியும் அடியோடு அழிந்து ஒழிந்து விட்டது எனலாம்.

இக்காலத்தில் சிவாஜியும் அவன் குடும்பத்தாரும் தமிழ்நாட்டு மராட்டியர் வாழ்வு வளர உதவினர். கி.பி.1639இல் அவர்கள் உதவியாலேயே மைசூர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/303&oldid=1358464" இலிருந்து மீள்விக்கப்பட்டது