பக்கம்:தமிழக வரலாறு.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

346

தமிழக வரலாறு


கொள்வார். இவர்களும் பெரும்பாலும் ஆங்கிலேயராகவே இருந்தனர். மாவட்டங்கள் பல வட்டங்களாவும் (Taluk), வட்டங்கள் சிறுசிறு நாடுகளாகவும் (Firka) பிரிக்கப்பட்டிருந்தன. அவ்வவற்றின் அலுவலாளர்கள் தத்தம் பணியைச் சரிவரச்செய்து, ஆண்டுக்கொரு முறை தண்டல் நாயகத்திடம் வேலை பற்றிய அறிக்கையை ஒப்படைக்க வேண்டும் அதைச் ‘சமாபந்தி’ என்பார்கள் அந்தச் சமாபந்தியையும், அதில் தம் கீழ் உள்ளார் செய்யும் பல அட்டகாசங்களையும் அவற்றால் உண்மையில் பயனடைய வேண்டிய ஊர் மக்கள் அவ்வாறு பயனடையா நிலையினையும் தமிழ்நாட்டில் பலகாலம் தண்டல் நாயகமாய் இருந்த J. சார்ட்டர்ஸ் மொலொனி என் பார் தம் நூலில் நன்கு எடுத்துக் காட்டியுள்ளார்.[1] அம் மாவட்ட முதல்வரிடம் நிலவரி பற்றியும் நிலம் பற்றியும் கொண்ட வேலைகளோடு, நாட்டு அமைதி காக்கும் பணியும் ஒப்படைக்கப்பட்டிருந்தது இப்போது உரிமை பெற்ற பிறகுதான் அதன் ஒரு கூறு பிரிக்கப்பெற்றிருக்கிறது. ஆளவந்த ஆங்கிலேயருள் பலர் மக்களை நேரில் கண்டு. அவர்களுடன் அளவளாவித் தத்தம் கருத்தை அவர்களுக்கு உணர்த்தி அவர்களையும் நன்கு அறிந்து கொள்ள விரும்பினர் எனினும், ஆட்சியில் உள்ள இடைப்பட்ட அதிகாரிகளும் பிற ஆட்சி முறைச் செயலாளரும் அவர்களை அவ்வாறு செய்ய ஒட்டாமல் தடை செய்தனர் எனலாம் எனினும், ஒரு சிலர் சாதாரண மக்களோடு நெருங்கிப் பழகித் தம் கருத்துகளை வெளியிட்டுள்ளனர்.

ஆங்கில அரசாங்க எல்லை விரிவடையவே, அதற் கேற்ற ஆட்சி முறைக்கு வேண்டிய அனைவரையும்


  1. A Book of South India- by J. Charters Molony
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/348&oldid=1359056" இலிருந்து மீள்விக்கப்பட்டது