பக்கம்:தமிழக வரலாறு.pdf/349

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

347


இங்கிலாந்திலிருந்து கொண்டு வரமுடியவில்லை. எனவே, அறிவறிந்த இந்திய நாட்டு மக்களையும் தம் ஆட்சிக் குழுவில் சேர்த்துக்கொள்ள முயன்றனர். நாளாக ஆகத் தம் ஆட்சிச் சபைகளிலுங்கூட இந்திய மக்களை உறுப்பினராகச் சேர்த்துக் கொண்டனர். 1860ல் தொடங்கப் பெற்ற இம்முறையின் நிலையே சிறிது சிறிதாக வளர்ந்து, 1935ல் மக்களின் நேரடித்தேர்வு முறையில் மாநில ஆட்சிச் சபைகளுக்கும், மத்திய ஆட்சிச் சபைக்கும் உறுப்பினரை அனுப்பும் வகையில்–வளர்ச்சி அடைந்தது. அதற்கு இடையில் ஆட்சிமுறை எத்தனையோ மாறுதல்களைப் பெற்றது எனலாம்.

தமிழ்நாட்டுச் சென்னை அரசாங்கமும் தன் ஆட்சிக்கு அறிவறிந்த சிலரை வேண்டிற்று. அக்காலத்தில் சிறந்திருந்த W. கிருஷ்ண சாமி ஐயர், P. சிவசாமி ஐயர், P ராசகோபாலாசாரியார், K. சீனிவாச ஐயங்கார், C.P. இராமசாமி ஐயர் போன்றவர்களைச் சென்னை அரசாங்கம் தன் ஆட்சிப் பொறுப்பில் சேர்த்துக் கொண்டது. இவர்கள் அனைவரும் பிராமணர்களாக இருந்த நிலைதான் நாட்டில் பிராமணர் பிராமணரல்லாதார் வேறுபாட்டை உண்டாக்கியிருக்குமோ என்ற குறிப்போடு திரு J. சார்ட்டர்ஸ் மொலோனி அவர்கள் எழுதுகிறார்கள்.[1] பணிக்கரும் தம் நூலில் சில பிராமணர்களையும் பிற அறிவறிந்தவர்களையும் தம் ஆட்சிப் பொறுப்பில் ஆங்கிலேயர் சேர்த்துக்கொண்டனர் எனக்குறிக்கின்றார்[2] எப்படியோ ஆங்கிலேயர் தம் ஆட்சியைத் தாமே வைத்துக்கொண்டிருந்த நிலை மாறி, ஆட்சிப் பொறுப்பில் இந்தியருக்கும் பங்கு உண்டு என்பதை நிலைநாட்ட நம்மவரையும் சேர்த்துக்கொண்ட காலம் தொடங்கி


  1. A Book of South India, P.
  2. A Survey of Indian History pp. 211-213
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/349&oldid=1359060" இலிருந்து மீள்விக்கப்பட்டது