பக்கம்:தமிழக வரலாறு.pdf/350

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

348

தமிழக வரலாறு


விட்டது எனலாம். இவ்வாறு மக்களில் சிலரை முன்னரே ஆட்சிப் பொறுப்பில் 1861ல் சேர்த்துக்கொண்டனர் பின் ரிப்பன் காலத்துச் சீர்த்திருத்தவழி நகராண்கழகங்களின் ஆட்சியும் அதை அடுத்து நாட்டாண்மைக்கழக ஊராண்மைக் கழக ஆட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக உருப்பெற்றன எனலாம். இவர்கள் காலத்தில் உருவாகிய ஊராண்மைக் கழகங்கள் சோழர் காலத்து ஊராண்மைக் கழகங்களை ஒத்து. அந்த நாளை நமக்கு நினைவூட்டுகின்றன எனலாம். பின், மிண்டோ-மார்லி சீர்திருத்தமும், அதன் பின் மாண்டேகு-செம்ஸ் போர்டு சீர்திருத்தமும் வளர வளர மாகாண மத்திய ஆட்சிப் பொறுப்புக்கள் அனைத்தும் இந்தியர் வசமே ஒப்படைக்கப்பட்டு விட்டன.

கலை வளர்ச்சி:

ஆங்கிலேயர் காலத்தில் பல நன்மைகள் பெற்றோம் எனக் கண்டோம். அவற்றுள் ஒன்று ஆளும் முறை. தமிழ் நாட்டில் சோழர் காலத்திலும் அதற்கு முன்பும் ஆளும் நெறி நன்கு போற்றப்பட்டு இருந்ததாயினும், இடைக் காலத்தில் பிற நாட்டார் கலப்பால் நிலைகெட்டதென்றே சொல்லலாம் ஆங்கிலேயர் ஆளும் நெறி, பின்னர் மக்களை ஆட்சிப்பொறுப்புள்ளவர்கள் ஆக்கிற்று என்பதுண்மை அதற்கு முக்கிய காரணம் ஆங்கிலேயர் மக்களைக் கல்வித் துறையில் முன்னேறச் செய்தமையேயாம். ஆங்கில அரசாங்கத்தார் முதலில் கல்வித்துறையில் அவ்வளவாகக் கருத்திருத்தவில்லை என நேரு அவர்கள் தம் நூலில் குறித்துள்ளார்.[1] பணிக்கரும் அக்கருத்தை ஒட்டி ஆங்கிலேயர் தம் கல்விமுறை விரைந்து மக்களை உயர்த்தவில்லை என்றார்.[2] எனினும் காலப் போக்கில் அவர்தம் கல்வி


  1. Discovery of ladia, P. 347
  2. A Survey of Indian History, P. 212.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/350&oldid=1359062" இலிருந்து மீள்விக்கப்பட்டது