பக்கம்:தமிழக வரலாறு.pdf/351

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

349


வளர்த்த நெறியே நாட்டை ஒன்றாக்கியது எனலாம். நமக்காக இன்றேனும் அவர்தம் ஒன்றிய ஆட்சி நடை பெற ஒருவரோடொருவர் கலக்க–ஒரு மொழி தேவையாய் இருந்தது. அதற்காக அவர்கள் ஆங்கிலத்தை மக்களிடைப் பரப்ப விரும்பினர். அதற்கேற்ப மேலை நாடுகளிலிருந்து சமயத்தொண்டாற்ற வந்த பலர் இங்குப் பற்பல இடங்களில் கல்வி நிலையங்கள் அமைத்தனர். சென்னை, பமபாய், கல்கத்தா போன்ற தலைநகரங்களில் பல்கலைக் கழகங்கள் உருவாயின. 1857ல் சென்னைப் பல்கலைக் கழகம் உருவாக்கப் பெற்றது. பல்கலைக் கழகங்களில் ஆங்கிலம் நன்கு பயிற்றப்பெற்றது. அவற்றில் பயின்றவர்களுள்ளே பலர் ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டு சிறந்தனர். அவ்வாறு அவர்கள் வேற்றுமை பாராட்டாது அனைவரையும் ஆங்கிலம் கற்கச்செய்தனர். அவர்தம் ஆங்கிலக் கல்வியே குமரி முதல் இமயம் வரை வாழும் மக்களை ஒன்றாக்கிற்று எனலாம் இந்தியநாட்டில் எம் மொழி பேசுவோரும் ஆங்கிலம் என்ற பொது மொழியால் ஒன்றிக் கலந்தனர். அவர்கள் கலப்பே பின் காங்கிரஸ் உருவாவதற்கும், உரிமை பெறுவதற்கும் வழி காட்டியாக நின்று, விடுதலை வேட்கையை வளர்த்துப் பின் அவ் விடுதலையையும் வாங்கித் தந்தது என்பது கண்கூடு. இன்றும் மேலைநாட்டுச் சமய நெறியாளர்தம் கல்விக்கூடங்கள் தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருப்பதைக் காணலாம்.

சமூகச் சீர்திருத்தம்:

கல்வித் துறையில் தமிழ்ப் பெண்கள் இடைக் காலத்தில் முன்னேறவில்லை எனலாம். சங்க காலத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/351&oldid=1359064" இலிருந்து மீள்விக்கப்பட்டது