பக்கம்:தமிழக வரலாறு.pdf/355

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆங்கிலேயர் ஆட்சி

353


தொகுத்து நூல் வழியில் வெளியிட்டு, அவற்றைக் குறிப்பெடுத்து அவற்றால் அறியப்பெறும் பல பழம்பெரு வரலாறுகளை உலகுக்குக் காட்டிய பெருமை ஆங்கில ஆட்சியையே சாரும். நாம் இதுவரையில் பயின்ற தமிழ் நாட்டு வரலாறு அனைத்துமே இவ்வரிய கல்வெட்டு ஆராய்ச்சி இன்றேல் எப்படி எழுதப்பெற்றிருக்கும்? தமிழ்நாட்டுக் கல்வெட்டுக்களும், செப்பேடுகளும், மாமல்லபுரம், தஞ்சை போன்ற கலைநிலையங்களுமன்றோ தமிழ் நாட்டு வரலாற்றை உலகுக்கு எடுத்துக்காட்டுகின்றன: அவை அழிக்கப் பெற்றோ, கட்டப் பெறாமலோ இருந்தால் தமிழ்நாட்டு வரலாறே இல்லை எனலாம். கல்வெட்டுக்கள் ஆயிரக்கணக்கில் படி எடுக்கப்பெற்றன. அவ்வாறு எடுக்கப் பெற்றவற்றை ஆராய்ந்து ஆண்டுதோறும் தொகுத்து அவற்றை ஆங்கில அரசாங்கத்தார் வெளியிட்டு வந்தனர் இன்று-இந்நாளில், நாம் உரிமை பெற்று எத்தனையோ ஆண்டுகளாயினும்இன்னும் அந்த முறையில் பல நூல்கள் வரவில்லை என்பதைத் தமிழர் வருத்தத்தோடு உணர வேண்டியவராகின் றார்கள். பலவிடங்களில் இன்று பழம்பெருங்கோயில்களை அரசாங்கத்தார் பாதுகாக்கின்றனர். இப்போது காப்பை இந்து சமய அறநிலையப் பாதுகாப்பாளர் மேற்கொள்ளல் நன்று. முந்நாளில் ஆங்கிலேயர் காலத்திருந்த அத்துணை உணர்வில் இன்று தமிழ்நாட்டில் கல்வெட்டுக்களும் பழம் பொருள்களும் ஆராயப் பெறவில்லை. அவற்றின் வழியே புது ஆராய்ச்சிகளும் வளரவில்லை எனலாம். எனவே இத்துறையில் இன்று உரிமை பெற்ற நாளைக் காட்டிலும் ஆங்கிலேயர் காலத்தில் சிறக்க அவர்கள் தொண்டாற்றினார்கள் என்பதுண்மை.

23

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/355&oldid=1358854" இலிருந்து மீள்விக்கப்பட்டது