பக்கம்:தமிழக வரலாறு.pdf/356

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

354

தமிழக வரலாறு


சுருங்கக்கூறின் ஆங்கிலேயர் ஆட்சி இல்லாதிருந்திருப்பின் தமிழ் நாட்டு வரலாறே இல்லை என்று சொல்லலாம்.

இலக்கிய சமய வளர்ச்சி:

தமிழ்நாட்டுச் சமயநிலை இவர்களுடைய காலத்தில் பெரிதும் மாறுதல் அடையவில்லை. பண்டைய சைவமும் வைணமும் தம் நிலையில் வளர்ந்து வந்தன. வடக்கே குஜராத்தில் தயானந்த சரசுவதி தோன்றி, 'ஆரிய சமாசம்' என்ற புதுப்பெயருடன் வேத இந்து சமயத்தை வளர்க்க முன் நின்றார்.[1] அது இந்திய நாடு முழுவதும் பரவிய காலத்தில் தமிழ் நாட்டிலும் கால் கொண்டது. அது போன்றே வங்காளத்தில் தோன்றிய விவேகானந்தரால் நிறுவப்பெற்ற இராமகிஷ்ணர் திருச்சபையும் தமிழ் நாட்டில் இடம் பெற்றது. இதே காலத்தில் மேலை நாட்டுக் கிறித்துவ சமயமும் வளர்ச்சி பெற்றது எனலாம். இவ்வாறு இக்காலத்தில் சைவ வைணவ சமய நெறிகளோடு பிற கோட்பாடுகளும், கிறித்தவ சமயமும், இசுலாமிய சமயமும் வளர்ந்தன.

சமயங்களோடு அவ்வவற்றின் சமய இலக்கியங்களும் வளர்ந்தன. சைவ வைணவ சமயங்களில் புது முறையான பல இலக்கியங்கள் வளர்ந்தன. 'தல புராணம்' என்ற ஒரு வகை இலக்கியம் தோன்றிற்றேனும் அவ்விலக்கியம் மக்கள் உள்ளத்தைத் தொடாமல், தோன்றிய காலத்தே மறைந்துவிட்டது எனலாம். பலப்பல சிறுவகைப் பிரபந்தங்கள் இக்காலத்தில் வளர்ச்சியுற்றன. சிவப்பிரகாசர், குமரகுருபரர் போன்ற சைவநெறி போற்றிய பல தலைவர்கள் இவர்கள் வருகைக் காலத்துக்குச் சற்று முன் பின்னாக வாழ்ந்து பலப்பல இலக்கியங்களை எழுதினர். அவர்


  1. 1. A Survey of Indian History. p. 218.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/356&oldid=1358870" இலிருந்து மீள்விக்கப்பட்டது