பக்கம்:தமிழக வரலாறு.pdf/376

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

374

தமிழக வரலாறு


கிறது. இதன்வழிக் கிராமத்தில் வாழும் மக்கள் அனைவரும் ஒன்றி, உருவாகும் பணியில் தங்கள் உழைப்பால் நான்கில் ஒருபங்கை அளித்து ஒற்றுமைப்படுகின்றனர். இன்னும் பல வழித்துறைகளில் கிராமங்கள் முன்னேற வழி காண்கின்றனர். இவற்றால் கிராம மக்களுக்குச் சாலைகள், பள்ளிகள், மருத்துவ விடுதிகள் போன்ற பல நன்மைகள் உண்டாகின்றன.

மொழிவழி நாடு:

1957 அக்டோபரில், நாடெங்குமே ஒரு மாற்றம் ஏற்பட்டது. காங்கிரஸ் அமைப்பு மொழி வழி இயங்குவது. அதன் தலைவர்கள் அக்காலத்திலிருந்து நாடு, மொழி வழி பிரிக்கப்படவேண்டும் என்று வற்புறுத்தியவர்கள் எனவே அவர்கள் ஆட்சிக்கு வந்ததும் நாட்டை மொழிவழியில் பிரிக்க வற்புறுத்தினர். என்றாலும், அவருள் மேலே ஆணை செலுத்தி இருந்தவர்களில் சிலர் ஆட்சி வசதி கருதியும், மக்கள் மனப்போக்குக் கருதியும், விரைவில் நாட்டை மொழிவழி பிரிக்க இசையவில்லை. என்றாலும் நாடெங்கும் கிளர்ச்சிகள் வலுத்தன. மக்கள் மொழிவழி நாடு பிரிய அவாக் கொண்டனர் ஆந்திர மக்கள் வேகம் வெகு கொடுமையாகி உண்ணாவிரதம், இறப்பு முதலியவற்றில் கொண்டுவிடவே, ஆந்திர மாகாணம் முதலில் உருவாயிற்று. பிறகு 1957ம் ஆண்டு அக்டோபர் 2ல் மொழிவழி மாகாணம் ஏற்பட்டது. அதனால், தமிழ்நாடு சில நூற்றாண்டுகளாக விட்டிருந்த குமரிமுனை அதனோடு இணைந்தது. எனினும், தொல்காப்பியர் காலம் முதல் வடஎல்லையாய் இருந்த திருப்பதி என்னும் வேங்கடம் ஆந்திர எல்லைக்கு உட்பட்டு விட்டது. தமிழக எல்லை அதற்குச் சுமார் இருபது கல்லுக்குத் தெற்கிலேயே அமைந்து விட்டது. ஓரளவு தனித் தமிழகம் உருவாகிய காரணத்தால் சென்னை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/376&oldid=1359094" இலிருந்து மீள்விக்கப்பட்டது