பக்கம்:தமிழக வரலாறு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விடுதலைக்கு முன்னும் பின்னும்

373


எழுதுகின்றனர். அதற்கேற்ப நாட்டிலும் வேற்றுமைகள் குறைந்துவருகின்றன எனலாம். சாதி சமயத்தால் நம் தமிழ்நாட்டில் போர்களும் பூசல்களும் இலவேனும் அவற்றின் வேறுபாட்டு நிலை நன்கு வேரூன்றி இருந்தது. உண்ணும் உணவுச் சாலையிலும், படிக்கும் பள்ளியிலும் தொழும் கோயில்களிலும் சிற்சில சாதியார் புகத் தகுதியற்றவர் என்றே இருந்த நிலை மாறி, இன்று யாரும் எங்கும் செல்லலாம் என்ற கொள்கை செயலளவில் நிறைவேறி வருகின்றது. திருமண முறைகளில் ஓரளவு இச்சாதிக்கொள்கை தளர்த்தப்படுகிறது எனலாம், தாழ்ந்த சாதிகளுக்கு அதிக உபகாரச் சம்பளங்களை அரசாங்கம் உதவுவதன் மூலம் கல்வியில் அனைவரும் முன்னேற வழி ஏற்படுகிறது. அது போன்றே அரசியல் அலுவல்களிலும் தாழ்ந்த சாதிகளுக்குச் சலுகை தருவதால், அவர்கள் முன்னேற வழியுண்டாகிறது. எனினும், இவையாவும் இந்திய அரசியல் சட்டத்தின்படி ஒரு குறிப்பிட்ட கால எல்லையில் நின்றுவிடும். அதற்குப் பின் அனைவரும் விழித்தெழுந்து ‘எல்லோரும் ஓர்குலம்’ என்ற கொள்கைவழி நாட்டில் ஒன்றிப் பழகி முன்னேற்றப் பாதையில் சென்று நாட்டை நாடாக்க வழி காணவேண்டும்.

கிராம வளர்ச்சி:

கிராமங்களை வளர்க்கும் வகையில் இந்திய அரசாங்கம் பலப்பல ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது. சமுதாய வளர்ச்சித் திட்டம், தேசிய வித்தரிப்புத் திட்டம் போன்ற பலவற்றைக் கிராமங்களில் தொழில்பட ஏற்பாடு செய்து வருகின்றது. இவற்றைத் தமிழ்நாட்டு அரசாங்கம் மட்டும் செய்யவில்லை எனலாம் இந்திய அரசாங்கமே முன்னின்று பொருள் தந்து உதவி ஊக்கு-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/375&oldid=1359092" இலிருந்து மீள்விக்கப்பட்டது