பக்கம்:தமிழக வரலாறு.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

தமிழக வரலாறு


யாரும் கூறமாட்டார். எனினும், அவன் மொழி வகையால் பிற விலங்கிலிருந்து வேறானான். இன்று உலகில் வாழும் மக்கள் பேசும் மொழிகளைப் பலவகையில் பிரிக்கின்றார்கள். இந்து ஐரோப்பிய மொழிக் குடும்பம் என்றும், செமிட்டிக்குக் குடும்பமென்றும், திராவிட மொழிக் குடும்பம் என்றும் பல வகையில் உலக மொழிகள் பிரிக்கப்படுகின்றன. இங்குத் தமிழகத்தில் மிக்க பழங்காலத்திலிருந்து வழங்கி வந்த மொழி திராவிட இனத்தைச் சேர்ந்ததே என்று கொள்வதில் தவறு இல்லை ஒரு சிலர், மனித இனம் மத்திய ஆசியாவிலே தோன்றி, ஒரு மொழி பேசிப் பிறகு அந்த இனம் நான்கு பக்கங்களிலும் சிதறிச் சென்று பல குடும்பங்களாக மாறிற்று என்பர். சிலர், இழந்த லெமூரியாக் கண்டமாகிய பழந்தமிழகமே உலக மக்களினத்துக்கும், மொழிக்கும், நாகரிகத்துக்கும் தொட்டிலாய் இருந்து, பெற்று வளர்த்துப் பிற நாடுகளுக்கு அனுப்பியது என்பர். இருவர் கூற்றும் மெய்யாகலாம். இன்றைய மொழிக் குடும்பங்களின் இருவேறு வகைப்பட்ட அமைப்பும், தோற்ற வளர்ச்சி முறைகளும், இவ்வுண்மையினைப் பல வரலாற்று ஆசிரியர்கள் ஏற்றுக் கொள்ளுகின்றனர் இரு வேறு வகைப்பட்ட உலக மக்களின் பண்பாடு, நாகரிகம், கலை, மொழி ஆகியவற்றின் நிலைகளும் அவர்தம் கூற்றை மெய்ப்பிக்கலாம். எப்படியாயினும், நம் பழந்தமிழ் நாடு உலகில் மிகத் தொன்மை வாய்ந்ததென்பதும், அதன் மொழியும் கலையும், பண்பாடும், பிறவும் காலத்தால் பழையன என்பதும் ஆராய்ச்சியாளர்கள் கண்ட உண்மைகளாகும்.

நாகரிக வளர்ச்சி :

ஆதி மனிதன் தான் விலங்கினும் வேறானான் என அறிந்ததோடு அமையாது, தனக்கென உணவு, உடை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/78&oldid=1357418" இலிருந்து மீள்விக்கப்பட்டது