பக்கம்:தமிழக வரலாறு.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

78

தமிழக வரலாறு


எதுவாயினும், அது அவன் வாழ்வில் மறக்க முடியாத ஒரு திருப்பு மையமாகும். இன்று நாடு விட்டு நாடு சென்று நடக்கும் வாணிப வளனுக்கு எல்லாம் அது தானே முதல் இடமாக அமைகின்றது இப்படி எத்தனையோ மைல் கற்கள் அவன் வாழ்க்கை வரலாற்றுப் பாதையில் வந்து வந்து சென்று கொண்டிருக்கின்றன. அவனுந்தான் தோன்றிய அந்த நெடுங்காலத்துக்கு முன் தொட்டு இன்று வரை இயற்கையை எதிர்த்து, விலங்கு பறவை, ஊர்வன முதலிய பிற உயிர்களை எதிர்த்துப் போராடி, தன் வாழ்வின் தேவைகளை அமைத்துக் கொண்டு இன்று ஓரளவு அவை அனைத்தையும் கட்டியாள்வதோடு விண்ணும் மண்ணும் தன் ஆணையின் கீழ் உள்ளன என்ற பெருமிதத்தால் தருக்கி வாழும் வகையில் வந்து விட்டான். ஆம்! இவனது வரலாற்றை அன்று தொட்டுச் சங்ககால எல்லை வரை பொதுப்பட ஆராய்வதே வரலாற்றுக்கு முற்பட்ட தமிழகத்தை நமக்குக் காட்டுவதாகும்.

கற்காலமும் இரும்புப் காலமும் :

பனிபடு கால எல்லையில் விலங்கினமென வாழ்ந்த மனிதன் சிறிது சிறிதாகக் காலம் செல்லச் செல்ல முன்னேற்றங் கொள்ள ஆரம்பித்தான். எந்த வகையில் அவன் கி, மு 50,000லிருந்து 5000தைத் தாவிப் பிடித்தான் எனத் திட்டமாகக் கூற இயலாவிட்டாலும், அவன் முன்னேற்றம் மிக அமைதியாக– மெதுவாக நடை பெற்றது என்று கொள்ளுதல் வேண்டும். அவன் மரமேறக் கற்றுக் கொண்டான். விலங்கினத்தைப் போன்று கண்டதைக் கண்டபடியே தின்னும் இயல்பிலிருந்து சிறிது சிறிதாக விடுபட்டு, வேறு வகையில் தன் உணவினை அமைத்துக் கொண்டான் மனிதன். அவன் தன்னைத் தாக்க வரும் விலங்குகளிடமிருந்து காப்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழக_வரலாறு.pdf/80&oldid=1357433" இலிருந்து மீள்விக்கப்பட்டது