பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. ஆதன் எழினி கோசர் குலத்தவனா? தமிழ் நாட்டைச் சேர, சோழ, பாண்டியர் போலும் மூவேந்தர்கள் மட்டுமே அல்லாமல் பாரி, காரி, ஒரிபோலும் வள்ளல்கள் எழுவர்களும், அகுதை, அதியன் போலும் எண்ணிலாக் குறுநிலத் தலைவர்களும் ஆண்டு வந்துள்ள னர். அவ்வாறு ஆண்டுவந்தாருள் ஆதன் எழினி என்பா னும் ஒருவன். அவன் வரலாறு அறியத் துணைபுரிவன: "கெடா அத்தீயின் உருகெழு செல்லூர்க் கடாஅ யானைக் குழுஉச் சமம் த ைதய மன் மருங்கு அறுத்த மழுவாள் நெடியோன் முன் முயன்று அரிதினின் முடித்த வேள்வி.’’ -அகம் ; 220 “அருந்திறல் கடவுள் செல்லூர்க் குணா அது பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர் இரும்பு இடம் படுத்த வடுவுடை முகத்தர் கடுங்கண் கோசர் நியமம்’ - அகம் : 90 'கடலாடு மகளிர் கொய்த ஞாழலும் கழனி உழவர் குற்ற குவளையும் கடிமிளைப் புறவில் பூத்த முல்லையொடு பல் இளங்கோசர் கண்ணி அயரும் மல்லல் யாணர்ச் செல்லிக் கோமான் 97