பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எறிவிடத்து உலைபாச் செறிசுரை வென் வேல் ஆதன் எழினி அருநிறத்து அழுத்திய பெருங்களிற்று எவ்வம்' - - அகம்;216 இவற்றுள் முன்னைய இரண்டும் மதுரை மருதன் இள நாகனார் பாடியவை; மூன்றாவது ஐ யூ ர் முடவனார் பாடியது. இப் பாக்கள் மூலம் அறியக் கூடியன எல்லாம்; 'சோழ நாட்டில், கிழக்குக் கடற்கரையை அடுத்துள்ள பட்டினங் களுள் செல்லூர், என்பதும் ஒ ன் று அச் செல்லூர் மன்னர் குலம் மண்மேடு இட்டுப்போக முயன்ற மழுவாள் நெடியோனாம் பரசுராமன் வேள்வி செய்த விழுச் சிறப்புடையது; வேள்வித் தீயால் விழுப்புகழ் பெற்ற அப்பேரூர், அருந்திறல் கடவுளர் நின்று காக்கும் அருமை யுடையது, அச் செல்லுர்க்குக் கிழக்கே, கடல் அலை ஒலிக்கும் நியமம் எனும் நகர் ஒன்று உண்டு. அந் நியமப் கோசர் என்பார்க்கு உரித்து. நியமத்தை வாழிட மாகக் கொண்ட கோசருள், இளையராயினார் செல் லூர்க்கு அணித்தே வந்து ஒன்று கூடியிருந்து கடலாடு மகளிர் கொய்து தந்த புலி நகக் கொன்றை கழனி உழவர் பறித்துத் தந்த குவளை, காவற் காட்டில் தானே மலர்ந் திருக்கும் முல்லை ஆகிய மலர்களைத் தலைமாலையாம் கண்ணியாகக் கட்டி அணிந்து ஆடி மகிழ்வர்; அச் செல்லுரை உரிமை பூண்டு ஆண்டிருந்தான், ஆதன் எழினி என்பானொரு பெருவீரன். அவன் யானைப் போர் வல்லன் களிற்றின் மீது வேல் எறியும் வீரம் மிக் கோன் அவன் எறிந்த வேல் ஏற்ற களிறுகள் கடுந்துயர் உற்றுக் கலங்கி அழியும்' என்ற இவ்வளவே, ஆதன் எழினி குறித்தும், அவனுக்கு உரிய செல்லூர் குறித்தும் அறியத் தக்கன. இந்துணையவே. - - 98.