பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதேபோல், ஆதன் எழினி என்பான் பெயரில்'ஆதன்" என்பதை அடுத்து வரும் 'எழினி’ என்ற பெயரைத்தாங்கி நிற்கும் குறுநிலத் தலைவரும் பலராவர். - தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் தலையாலங்கானப் போரில், வெற்றி கொண்ட எழுவரில் ஒருவன் எழினி, அவன் போரில்வல்ல யானைப்பனடயி னையும், பொன்னால் ஆன பூண்களையும் உடையவன், என்கிறார் அப் போர்ப் பரணி பாடிய புலவர் நக்கீரர். போர்வல் யானைப் பொலம் பூண் எழினி’ எ ன் ற தொடரினைக் காண்க. புலவர் மாங்குடி கிழாரால் பாராட்டப் பெற்றவனும் 'ே வாட்டாற்றிற்கு உரியவனும் ஆகிய ஒருவள்ளல் பெயரிலும் 'எழினி’ என்ற அப் பெயர் வந்துளது. ‘வளநீர் வாட் டாற்று எழினி’ என்ற தொடரைக் காண்க. அவன் பெயரில், எழினி’ என்ற பெயர் மட்டும் அல்லாமல், மேலே கூறிய ஆதன் என்ற பெயரும் தொடர்ந்து இடம் பெற்றுளது. நம்மவன் 'ஆதன் எழினி’ என்றால், இவன் எழினி ஆதன் மேலும், அவன் கோசர் மரபினன் அல்லன் மாறாக, வேளிர் வழி வந்தவன் என்பதற்கான அகச்சான் றும் அப்பாட்டிலேயே இடம் பெற்றுள்ளது. கழுமிய வென் வேல் வேளே! வளநீர் வாட்டாற்று எழினி ஆதள் என்ற தொடர்களைக் காண்க. இதனைத் திருவாளர். ரா. இரா கவையங்கார் அவர்களே ஒப்புக் கொண்டுள்ளார். அவரு டைய கோசர் என்ற நூலில், 'எழினி ஆதனை, வேள் என்றது போல், ஆதன் எழினியைக் கூறாமையும் காண்க: என்று கூறியுள்ளார். - . . கடைஎழு வள்ளல்கள் எழுவர் மாய்ந்த பின்னர், பெருங் கொடைவள்ளலாக வாழ்ந்த குமணனைப் பாராட் - டிய புலவர் பெருஞ்சித்திரனார் அக்கடையெழு வள்ளல் 100