பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற பாடலை எடுத்தாண்டு விட்டு, ஈண்டுச் செல்வி என்பது செல்லுர் க்கு ஒரு பெயர் என ல் கொள்ளத் தகும்’ என்று கூறுகிறார்ே அதையடுத்து, “அருந்திறற் கடவுட் செல்லூர்க் குணா அது பெருங்கடல் முழக்கிற்று ஆகி, யாணர், இரும்பிடம் படுத்த வடுவுடை முகத்தர் கருங்கண் கோசர் நியமம்’ என்ற பாடலைக் காட்டி விட்டு, ‘என்றதனால், செல்லூர்க்குக் கிழக்கே கடலோரத்துக் கோகர் வாழும் நியமம் என்ற ஊர் இருப்பது அறியப்பட்டது; அதனால் அதற்கேற்ப ஈண்டுச் செல்லி செல்லூர் எனக் கொள்ளப் பட்டது. மேலே காட்டிய அகப் பாட்டில் மலைப்புறமே கூறாது, கடலும் கழியும், கடிமிளைப் புறவுமே கூறுத லான், இது சோணாட்டதாதல் தெள்ளிது: என்று கூறும் திருவாளர், அய்யங்கார் அவர்கள், செடா அத் தீயி னுருகெழு செல்லூர்... கடா அயானைக் குழு உச்சமந்ததைய மன் மருங்கறுத்த மழுவா ணெடியோன் முன் முயன் றரிதினின் முடித்த வேள்விக் - கயிறரை யாத்த காண்டகு வனப்பி னெடுந் துரண்' என்ற பாடலை எடுத்தாண்டு விட்டு, பரசுராமன் காசி பனைக் கொண்டு வேட்பித்த இடம், செல்லூர் என்பது. 220-ஆம் அகப் பாட்டால் அறியப்படுதலான், பரசுராமன் பின்னே வருணனை வேண்டிப் புதிதாக உண்டாக்கிய கடன் மலை நாட்டில் இச் செல்லூர் இருத்தல் பொருந் தாது என்பது தெரியலாம்' என்று கூறுகிறார். 120