பக்கம்:தமிழக வரலாறு கோசர்கள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இக்கருத்து. சங்கத் தமிழ் நூல்களை முறையாக ஆராய்ந்து புலவர் வரிசை எ ன் ற தலைப்பில் 16 நூல்களையும், அரசர் வரிசை என்ற தலைப்பில் 6 நூல்களையும் வெளியிடுவதற்கு முன்னர்க் கூறப்பட்டது. கழகம் வெளியிட்ட மேற்படி வரிசையில், 1955 சனவரி யில் வெளிவந்த கடைசி நூலாகிய திரையன் முதலிய 29 பேர்கள் என்ற தலைப்பிட்ட நூலின் 109 ஆம் பக்கத்தில் எழுதப்பட்ட, கோசர் ' என்ற தலைப்புள்ள கட்டுரையில், 113 ஆம் பக்கத்தில் வடநாட்டுப் பேரரசு சளுள் மெளரியப் பேரரசும் ஒன்று. அப்பேரரசர் படையொன்று, தமிழகத்தைத் தன்னடிப்படுத்தும் நோக்குடன் தென் னாடு நோக்கி வரலாயிற்று. அவ்வாறு வந்த பெரும்படைக்குத் தமிழகத்தின் வடவெல்லையை அடுத்து வாழ்ந்த வடுகர் என்பார் துணை புரிந்தனர். வந்த பெரும்படை பழைய னுக்குரிய மோகூரை வளைத்துப் போரிட்டது. - பழையனை வென்றாலல்லது, பாண்டி நாடு முதலாம் பேரரசு களை வீழ்த்த இயலாது என அறிந்த அப்படை, பேராற்றல் காட்டிப் போரிட்டது. அக் காலை, த ன் ஊர்க்கன் தங்கியிருந்த பழையன் மாறன். அப்படையின் ஆற்றலைச் சிறுகச் சிறுக அழித்துக்கொண்டே மோகூர்க் கோட்ட்ையுள் அடங்கியிருந்தான். ஆயினும், மோரியர் பெரும்படைய்ைக்,கோசர் படைத்துணை இன்றி அழித்தல் பழையினால் இயலாது எ ன அறிந்தான் பாண்டியன். உடனே, தன் கீழ்ப்பணிபுரியும் கோசர் படையை, மோகூர் நோக்கிப்போக விட்டான். தங்கள் படைத் தலைவனையும் தமிழகத்தையும் ஒருங்கே காக்கும். ஒப்பற்ற பணி மேற்கொண்டு, மோகூர் வந்த கோசர்படை.தேர்ப்படையோடு கூடிய மோரியர் பெரும்படையை வென்று துரத்திற்று. தமிழகத்திற்கு நோஇருந்த தாழ்வினைத் தடுத்துப்போக்கினர் கோசர் எனக் கருத்துத் தெரிவித்துள்ளேன். 5